யாழ்ப் பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் ஒருங்கிணைக்கப்பட்ட ரயில் பஸ் சேவை ஒன்றை நடத்த போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் ஓர் அங்கமாக கொழும்பு கோட்டையில் இருந்து வவுனியா வரை ரயில்சேவை இடம்பெறுகிறது. இந்த ரயில் மூலம் யாழ்ப்பாணத்துக்கு பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் வவுனியாவிலிருந்து பஸ் மூலம் எஞ்சிய தூரத்தை பயணிக்க இரண்டாம் கட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதே போன்று யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் செல்கின்றவர்களும் முதலில் பஸ் மூலம் யாழ்ப்பாணத்திலுருந்து வவுனியாவுக்குச் சென்று அங்கிருந்து ரயில் மூலம் கொழும்பு நோக்கி புறப்படவேண்டும்.
யாழ் கொழும்பு பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளின் வசதி கருதி போக்குவரத்து அமைச்சு இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது. வெகு விரைவில் இத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக போக்குவரத்து அமைச்சு மேலும் தெரிவிக்கின்றது.