கட்டு நாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பார்வையாளர் கூடம் இன்று திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் என்று விமான நிலையத்தின் நிர்வாகப் பிரிவு அறிவித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களால் கடந்த சில வருடங்களாக மூடப்பட்டிருந்த குறித்த விமான நிலையதின் பார்வையாளர் கூடத்தை மீண்டும் திறப்பதற்கான அனுமதி பாதுகாப்பு தரப்பிடமிருந்து கிடைக்கப்பெற்றதை அடுத்தே மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் இலக்கு வைக்கப்பட்டதை அடுத்து விமான நிலையத்தின் பார்வையாளர் கூடம் மூடப்பட்டது. பார்வையாளர் கூடம் திறக்கப்பட்ட போதிலும் அக்கூடத்துக்கு செல்வதற்கான அனுமதியும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்படவுள்ளன