இந்தி யாவின் புதிய வெளிவிவகார செயலாளராக நிருபமாராவ் இன்று சனிக்கிழமை பதவியேற்கிறார். சிவ்சங்கர் மேனனிடமிருந்து இன்று காலை 7 மணிக்கு பதவியை பொறுப்பேற்கும் நிருபமாராவ் கோகிலா ஐயருக்குப் பின்னர் இந்தியாவின் வெளியுறவு செயலாளராகும் இரண்டாவது பெண்ணாவார்.
58 வயதுடைய நிருபமா வெளிவிவகார சேவையில் பல முக்கியமான பதவிகளில் இருந்துள்ளார். இலங்கையில் இந்திய உயர்ஸ்தானிகராகப் பணியாற்றியிருந்த நிருபமா சீனத் தூதுவராகப் பணியாற்றி வந்தார்.
அதிகளவு நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் புதிய பதவியை ஏற்றுக்கொள்ளப் போவதாகவும் எதிர்நோக்க வேண்டியுள்ள சவால்கள் குறித்து பூரணமாக அறிந்திருப்பதாகவும் முன்னோக்கிச் செல்வதே தனது எதிர்பார்ப்பெனவும் ஏ.என்.ஐ.செய்திச் சேவைக்கு நிருபமா கூறியுள்ளார்.
DEMOCRACY
என்னுடய மனம் கவர்ந்தவர். என்னுடய விருப்பத்திற்கு எதிரானவர் என்றாலும், யதார்த்தமானவர் என்பதால், என்னுடைய மதிற்பிற்கு உரியவர்!. இலக்கைத் தமிழர்களை, சரியாக “டெஃபனிஷன் செய்பவர்” என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் என்னைப் போலவே இலங்கைத் தமிழர் மீது “அன்பு” கொண்டவர். நிச்சயமாக, பிரபாகரன் இறந்ததத்திற்கு, கலைஞர், ஜெயலலிதா, சிவசங்கரி, சோ, இந்து ராம், “நான்”, போலவே வருத்தப்படக் கூடியவர். நிச்சயமாக இதில், ஸ்டாலி, கனிமொழி, விஜயகாந், ரஜினி காந்த், போன்றவர்கள் அடங்க மாட்டார்கள்!. கே.பி.இதை கவனிக்க!. அவருடைய எதிர்கால பணிகளுக்கு வாழ்த்துக்கள்!
santhanam
மிகவும் அற்புதமான நீண்ட சனக்கியமான ராயதந்திரி இலங்கை உள்விவகாரத்தில் நீண்ட அனுபவம் மிக்கவர் ராஐபக்சவிற்கு மிகவும் நெருக்கமானவர் டிக்சித்தின் வழிதான் அவரின் வழி சநதிரிகாவிடமிருந்து கட்சியை பறித்த பெருமை இவரைதான் சாரும்.
thurai
//என்னைப் போலவே இலங்கைத் தமிழர் மீது “அன்பு” கொண்டவர்.//
புலத்தில் வாழும் சில தமிழர்களிற்கு, பெற்ர பிள்ளையை விடபணம் மீதே மோகமதிகம். ஈழத்தில் வாழும் தமிழர்களிற்கோ தங்கள் சொந்தங்கள், சாதிகள், சமயங்கள், ஊர்களின் மீதே பற்றுஅதிகம். தமிழ்மொழி, தமிழரின் உருமைப் போர் என்பதெல்லாம் புலத்தில் ஓர் வியாபாரப் பொருள்.
இந்தநிலையில் அன்பு என்ற கடவுளிற்கு நிகரான சொல்லை, பிரபாகரனென்னும் கோவிலில் கும்பிடுபவனையே கொல்லும் கொலைகாரனை வணங்குவோர் சொல்லத் தகுதியற்ரவர்கள்.
துரை