இலங்கை பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2 வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு தம்புள்ள கிரிக்கட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் நடந்த முதல் ஆட்டத்தில் இலங்கை அணி 36 ரன் வித்தியாசத்தில் வென்று 1 – 0 என்ற கணக்கில் முன்னணி வகிக்கிறது.