அடுத்த மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான அனுமதிப் பத்தரங்கள் தற்போது பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்தார். அனுமதிப் பத்திரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் அது குறித்து ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர் குறிப்பிட்ட பிரதேசத்துக்குப் பொறுப்பான கல்விப் பணிப்பாளருக்குத் தெரிவிக்குமாறு அவர் அதிபர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வருடத்துக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இதேவேளை அடுத்த மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரிட்;சைக்கான அனுமதிப் பத்திரங்களையும் விரைவில் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் மேலும் தெரிவித்தார்