சீனா மற்றும் இந்தியப் பிரதமர்களுக்கிடையில் நேரடித் தொலைபேசி இணைப்பு (ஹொட்லைன்) இருக்க வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுத்துள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா எழுத்து மூலம் பதிலளிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இருநாடுகளின் பிரதமர்களிடையே தொடர்ச்சியான தொடர்பிற்கு நேரடித் தொலைபேசி இணைப்பு ஏற்படுத்தத் தேவையான தொழில்நுட்பம், மற்ற வசதிகள் குறித்து இருநாடுகளும் ஆலோசனை செய்து வருவதாக தெரிவித்தார். இந்தியா மற்றும் ரஷியாவுக்கிடையே இதுபோன்ற நேரடித்தொலைபேசி இணைப்பு செயல்பட்டு வருவதாக மேலும் அவர் தெரிவித்தார்.