பாகிஸ் தான் முன்னால் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரபுக்கு எதிரான வழக்கு நேற்று பாகிஸ்தான் உயர் நீதிமன்றத்தில் விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது முஷாரபோ அல்லது அவர் சார்பாகவோ எவரும் ஆஜராகவில்லை. பாகிஸ்தானில் அவசர நிலையை அமல்படுத்தியது குறித்து விளக்கம் அளிக்கும்படி உயர் நீதிமன்றம்; உத்தரவிடடிருந்தும் முஷாரப் சார்பில் நேற்று யாரும் ஆஜராகவில்லை.
பாகிஸ்தானில் கடந்த 99ம் ஆண்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆட்சியைக் கவிழ்த்து அதிபரானவர் முஷாரப். தலைமை நீதிபதி இப்திகார் அலி சவுத்ரி உள்ளிட்ட 60க்கும் அதிகமான நீதிபதிகளை பதவி நீக்கம் செய்து, 2007ம் ஆண்டு அவசர நிலையை பிறப்பித்தார்.
முன்னாள் பிரதமர்கள் பெனசிர் புட்டோவும், நவாஸ் ஷெரீப்பும் இணைந்து பொதுத் தேர்தலில் பிரசாரம் செய்ததன் விளைவாக, முஷாரப் ஆதரவு கட்சிகள் தோல்வியைத் தழுவின. பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சியைப் பிடித்தது. ஆளும் கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தம் காரணமாக முஷாரப் பதவி விலகினார். பதவி நீக்கம் செய்யப்பட்ட இப்திகார் அலி சவுத்ரி மீண்டும் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
இந்நிலையில், பாகிஸ்தானில் அவசர நிலையை கொண்டு வந்ததை எதிர்த்தும், நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ததைக் கண்டித்தும், வக்கீல் சங்கங்கள்; உயர் நீதிமன்றத்தில்; கடந்த வாரம் மனு தாக்கல் செய்தன. இந்த மனுவை தலைமை நீதிபதி இப்திகார் அலி சவுத்ரி தலைமையிலான 14 பேர் கொண்ட நீதியரசர்கள் குழு விசாரித்தது.