ஈழத் தமிழர்கள், அவர்களின் வேட்கையான தனியான தாயகத்தைப் பெற்றுக்கொள்வதற்கு இந்தியா உதவும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் இந்திய நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார்.
இந்தியாவில் இருந்து வெளிவரும் ‘டெக்கான் குரோனிக்கல்’ நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில், “பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, ஈழத் தமிழர் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் பழ.நெடுமாறன் ஆகியோர் தயாராகவில்லை” எனவும் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்தார்.
பிரபாகரன் தொடர்ந்தும் உயிருடன் இருப்பதாக வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் தொடர்ந்தும் தெரிவித்துவருவது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, “அவர்கள் உண்மையை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இறுதிக்கட்டச் சமரின் போது எமது தலைவரும் மற்றும் போராளிகளும் வீரச்சாவு அடைந்தார்கள்” எனவும் செல்வராஜா பத்மநாதன் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் உடலைப் பெற்றுக்கொள்வதற்குத் தான் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்த செல்வராஜா பத்மநாதன், இருந்தபோதிலும் அவரின் உறவினர்கள் எவரும் அதனைப் பெற்றுக்கொள்வதற்கு முன்வரவில்லை எனவும் தெரிவித்தார்.
இந்தியா உட்பட உலகில் உள்ள பல நாடுகளும் ஈழத் தமிழர்களின் துன்பங்களையிட்டு தமது கரிசனையை வெளிப்படுத்திவருவதாகவும் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்தார். “தற்போது நாம் செயற்குழு ஒன்றை அமைத்துள்ளோம். அந்தக் குழு நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்றை அமைப்பது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றது. கடந்த அரை நூற்றாண்டு காலமாக எமது மக்களின் கனவாக இருந்துவரும் தமிழீழத்தை அடைவதற்கான செயற்திட்டம் ஒன்றை இந்தக் குழு தயாரித்து வருகின்றது” எனவும் அவர் தமது தற்போதைய செயற்பாடுகள் தொடர்பாக விபரிக்கையில் தெரிவித்தார்.
“ஒதுக்கப்பட்ட மக்கள் சார்பாக நின்று அவர்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதில் இந்தியா கடந்த காலத்தில் முக்கிய பங்காற்றியிருக்கின்றது. உலகம் முழுவதில் உள்ள ஈழத் தமிழர்களும் தமது விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதற்கு இந்தியா உதவும் என நம்புகின்றார்கள்” எனத் தெரிவித்த செல்வராஜா பத்மநாதன், “இந்தியா எம்மைப் புரிந்துகொள்ள வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.
பல்லி
ஆக விடுதலை புலிகளை (பிரபா தலமையிலான) அழிக்க இந்தியா உதவியதை மறைமுகமாக பாராட்டிறியள்; அது சரி உங்களுடையது விடுதலை புலிகளா? அல்லது விடுதலையான புலிகளா?
thurai
குடு குடுப்பைச்சாத்திரியாக மாறிப் போகும் விடுதலைப் புலிகள்.
இனியாவது ஏதாவது தட்டைநீட்டினால் போடுங்கோ.
துரை
பார்த்திபன்
இப்ப எனக்கொரு சந்தேகம். கருத்தெழுதுவது பல்லியா அல்லது பல்லியின் ஆவியா ?? என்று.
பல்லி
பார்த்திபன் ஏன் இந்த வில்லதனம்?
ஓ பல்லியின் பின்னோட்டம் அங்கு போனதாலா?
என்னப்ப இது நாடு கடந்த தமிழ்ஈழம் கான படித்தவர்கள் முற்படும் போது படிப்பறிவில்லாத பல்லி அங்கு போவது முடியாத காரியமா? இருப்பினும் பார்த்திபன் கவலை வேண்டாம்; அவ்வளவு சீக்கிரம் தேசத்தை விட்டு செல்லும் நோக்கம் பல்லிக்கோ அல்லது பல்லியை அழைத்து செல்லும் …………..இல்லை;
msri
இந்தியாவிற்கு பிரபாகரனுடைய ஈழத்திலை பிடிப்பில்லை! பத்மநாதனின் ஈழத்திலை ஓர் பெரும் பற்றுதலோ?
மாயா
// விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் உடலைப் பெற்றுக்கொள்வதற்குத் தான் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்த செல்வராஜா பத்மநாதன், இருந்தபோதிலும் அவரின் உறவினர்கள் எவரும் அதனைப் பெற்றுக்கொள்வதற்கு முன்வரவில்லை எனவும் தெரிவித்தார்.//
அட பாவிகளா, டேய் எல்லாருக்கும்தானேடா அந்த மனுசன் தலைவர் என்று சொன்னீங்க. அவரைத் தவிர வேற ஒருத்தரையும் தலைவர் என்று சொல் மாட்டடோம் என்று அடம் பிடிக்கிறீங்க. அவரோட உடலைப் பெற்றுக் கொள்ள ஒரு நன்றியுள்ளது கூட முன் வரவில்லையா? ஐயோ…சாமி. என்ன கொடுமை இது.
அது சரி கேபீ. நீங்க இது குறித்து எந்த ஊடகத்திலயாவது அறிக்கையாவது விட்டிருக்கலாமே? தலைவரது உடலை பெற்றுத் தரச் சொல்லி நம்பியார் கிட்ட கேட்டீங்களா? இல்லை, உருத்திரகுமார் தந்த ஐடியாவா இது?
//கடந்த அரை நூற்றாண்டு காலமாக எமது மக்களின் கனவாக இருந்துவரும் தமிழீழத்தை அடைவதற்கான செயற்திட்டம் ஒன்றை இந்தக் குழு தயாரித்து வருகின்றது//
இதுவரை கனவாகத்தான் இருந்ததா? கனவு கண்டதுக்கே இத்தனை உயிர் போனதென்றால், நீங்க தமிழீழம் அடையும் போது ஒருத்தரும் இருக்க மாட்டாங்க. அது நிச்சயம். புலிகளின் தாகம் தமிழரில்லாத தாயகம்.
என்னதான் இருந்தாலும் 99 சத வீத புலி ஆதரவாளர்களுக்கு கேபீயை தெரியாது. இப்ப திடீர் என்று குதிச்சு கேபீ தன்னைத் தலைவர் என்கிறார் என்று புலி சார்பு ரேடியோக்களில் கடும் விவாதம் நடக்குது.
சிறீலங்கா அரசாங்கத்துக்கும் , சிங்களவனுக்கும் கூட கேபீ என்றால் யாரென்று தெரியும். ஆனால் இந்த போன புலிகளுக்கு தெரியல்லயப்பா? அந்த அளவு தெளிவான கூட்டம்? என்ன கொடுமை. தலைவரின் மாப்பிளைத் தோழனையே தெரியாத இவங்களெல்லாம் குவேனி – விஜயன் புராணம் பற்றி சொல்லும் போது சிரிப்புதான் வருது?
chandran.raja
புலி “முத்திரை” யோடு மாவீராக்கி பூவுலகை துறந்து ஜெமலோகம் போன ஆயிரக்கணக்கான போராளிகளே! பிரபாகரனைக் கண்டதில்லை. அவர்கள் கேட்தெல்லாம் “துன்பத்தை தந்தவனுக்கே அதை திருப்பிக்கொடு”. புலித்தலைவர் கண்டு பிடித்த தத்துவ ஞானங்களில் இது முதன்மையானது. அப்படியிருக்க கேபீ க்கு இன்னும் பல பத்துவருடங்களுக்கு தமிழ்மக்களை உலைத்துவிட விரும்பவில்லை. தற்சமயம் அவர்கள் எதிர் நோக்குவது அரசியலை சம்பந்தப்பட்டது அல்ல. தொழில் சார்ந்தது. மலைபோல் குவிந்திருக்கிற சொத்தை யார்? யார்? பங்குபோடுவது பற்றியது. ஆதாயம் இல்லாமல் ஆற்றை இறைப்பானோ? செட்டி. இதில்லிருந்து பிறப்பெடுப்பதே அறிக்கை அரசியல் கூட்டம் இன்னும் இத்தியாதி. றொபின்கூட் வழமைபோல் தப்பிவிட்டார் என எண்ணி இறந்ததே ஒருகிழமைக்கு பிறகு உறுதி செய்யும் பொழுது..சடலத்தை எப்படி…பெற்றுக்கொள்ள.
santhanam
மயிலிட்டியைச் சேர்ந்த KPக்கு, தேசியத் தலைவர் அவர்களால் சர்வதேசத்தில் திரிந்து செய்யும் முக்கியபணி வழங்கப்பட்டிருந்தது. KP மீது அப்போது இருந்த நம்பிக்கையில் அந்த முக்கிய பணி தலைவரால் வழங்கப்பட்டிருந்தது. KP தாய்லாந்தில் இயக்கப்பணிகளில் இருந்த போது ………………….
chandran.raja
இலங்கை ராணுவத்தின் சுற்றிவளைப்பில் தப்பிப்பிளைக்க வழியேதும் இல்லாதபோதே பிரபாகரனும் அவர் கூட்டாளிகளும் சயினைட்டையும் ஆயுதங்களையும் இராணுவத்திடம் கையளித்திருக்கிறார்கள். இது நடந்தது என்ஊகத்தின்படி மேமாதம் 16- 17 திகதிக்குட்பட்ட நாற்பத்திஎட்டு
மணத்தியால இடைவெளியில் இதன் பிறகே “இந்த உயிர்போக்கிகளுக்கு உள்உடம்பில் காயம் வராவண்ணம் பலவிதமான பூசைகள் நடந்தேறியுள்ள இறுதி நாளான 19-ம் திகதி வரைக்கும். … இதற்கு என்னால் ஒரு காரணத்தை மட்டும் சொல்லமுடியும். மக்களை என்றுமே மீட்சிபெறாத முட்டாளாக் கருதியதும் தம்முயிரில் அதீத காதல் கொண்டதும். ஆயுதத்தைதையும் பலாத்காரத்தையும் பலபத்து ஆண்டுகளாக நம்பியிருந்தவர்கள் ஆயுதத்தை மெளனிக்க பண்ணுகிறோம் என்றால் அவர்கள் கைகட்டி முழந்கால்லிருத்தி புலம்பெயர் புலிகளுக்காக வலுகட்டாயமாக சொல்லப்படவைத்த
வார்த்தைகளே!! மிகுதி புலம்பெயர்தமிழரின் அறிவுவிருத்திக்கு உட்பட்டது.
thevi
பிரபாகர கும்பலின் கடைசி நேரத்தில் நடந்தவற்றின் முழு வீடியோ புகைப்படங்களும் எப்போதாம் வெளிவரும்?
santhanam
அலிபாபவின் 40 திருடர்கள் இதுதான் புலத்து நாடுகடந்த………
மாயா
//thevi on July 31, 2009 9:35 pm பிரபாகர கும்பலின் கடைசி நேரத்தில் நடந்தவற்றின் முழு வீடியோ புகைப்படங்களும் எப்போதாம் வெளிவரும்?//
புலிகள் இது மாதிரி ஒரு நிகழ்வை செய்திருந்தால், இப்போது உலகம் முழுவதும் படம் காட்டி வசூல் செய்திருப்பார்கள். அனுராதபுரம் விமான தளத்தின் தாக்குதலைக் கூட ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ராஜீவ் கொலையில் ஒரு போட்டோ கமராவால்தான் தம்பிமார் சிக்கினார்கள். அதை மாற்றிக் கொள்ளவேயில்லை. தாக்குதல்களை பார்த்து ரசிக்கும் ஒரு மன நோயாளியாக இருந்திருக்கிறார் பிரபாகரன்.
கடைசி தமிழீழ யுத்த படம் வராது என நினைக்கிறேன். அது வந்தால் பலர் பல்லாக்கு தூக்க வேண்டி வரும். கிளைமெக்ஸ் பிரச்சனை? அது சரி புலிகளின் கடைசியாக தயாரித்த திரைப்படம் அகல திரையில் என்று ரீல் ஓட்டினார்கள். சும்மா கடிபடுற நேரம் அதை இப்ப ஓட்டலாமே?
chandran.raja
புலம்பெயர்ந்த தமிழர்களின் உணர்வு நிலை வேறுவகையானவை. அவர்களின் போதைநிலை விபரிக்க முடியாதைவை. சூரியதேவன் காவல்கோபுரம் எமது தேசியதலைவன் என்ற பதங்களை செவிபட கேட்டாயிற்று. லண்டனில் வசிக்கும் தொன்றூறு வயதிற்குட்பட்ட எனது தாய் கூட. புலத்தை பொறுத்தவரை ஈழமக்களுக்கு ஒவ்வொரு அலிபாவுகளே! இதற்கு தம்மை புனிதமாக கருதி சேவை செய்த ஊடகங்களும் விதிவிலக்கல்ல.