இலங் கைக்கும் பஹ்ரைனுக்குமிடையே வெளியுறவுகள், பொருளாதாரம், வர்த்தகம், தொழிநுட்பக் கூட்டுறவு மற்றும் சுற்றுலாத்துறை உட்பட பல்வேறு இருதரப்பு உடன்படிக்கைகள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்குமிடையே வெளியுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இலங்கை மற்றும் பஹ்ரைன் வெளியுறவு அமைச்சுக்களுக்கிடையே கைச்சாத்திடப்பட்டது.
இரு நாடுகளுக்கிடையேயும் பொருளாதாரம் வர்த்தகம் தொழிநுட்பக் கூட்டுறவு என்பவற்றை ஊக்குவிக்கும் வகையில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவுக்கும் பஹ்ரைன் பிரதிப் பிரதமர் செய்க் முஹம்மத் பின் முபாரக் அல் கலீபா அவர்களுக்குமிடையே மற்றுமொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது