புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நபருடன் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் மேலும் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து 3 தற்கொலை அங்கிகள் உட்பட பெருந்தொகையான வெடிபொருட்கள், இரு துப்பாக்கிகள் மற்றும் சில ரவைகள் என்பனவற்றை பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் தொடர்பான மேலதிக விசாரனைகள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.