யாழ்ப் பாணத்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தில் ஒரு நாள் விற்பனை 6 இலட்சம் ரூபாவாகக் காணப்பட்டதாக விற்பனை அபிவிருத்தி கூட்டுறவு மற்றும் நுகர்வோர் சேவைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். யாழ் ச.தொ.ச கிளை நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டதும் பெரும் திரளான மக்கள் பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அதிகூடிய விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படும் வேளையில் இது போன்ற விற்பனை நிலையம் மூலம் மக்களுக்கு சகாய விலைக்கு பொருட்கள் கிடைப்பது பெரியதொரு நிவாரணமாக அமைகிறது.
ஏ 9 வீதி ஊடாக யாழ் ச.தொ.ச வுக்கு பொருட்களை அனுப்பி வருவதாகவும் வட பகுதியில் மேலும் பல ச.தொ.ச கிளைகளைத் திறக்க உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்