தற்காலி கமாக மூடப்பட்டுள்ள களனி பல்கலைக்கழகம் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது. இரு மாணவர்கள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட இப்பல்கலைக்கழகத்தை எதிர் வரும் 30 ஆம் திகதி மீண்டும் திறப்பதற்கு அதன் உப வேந்தர் பேராசிரியர் சரத் அமுனுகம தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் ஊடகப்பிரிவு அறிவிக்கின்றுது.
விடுதி மாணவர்கள் அனைவரும் எதிர்வரும் 29 ஆம் திகதி புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு முன்னர் விடுதிகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.