வவுனியா முகாம்களிலிருந்து, பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி நடைபெறுமென வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் ரஞ்சனி ஒஸ்வேர்ட் கூறினார். யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்திற்கு 173 தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் தெரிவாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, எதிர்வரும் 21ஆம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் சமரநாயக்கவும் மற்றும் அதிகாரிகளும் முகாம்களுக்குச் சென்று மாணவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்துகொள்ளவுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.