உடத்தலவின்ன கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் விடுதலை!

supremecourtphoto.jpgகண்டி உடத்தலவின்ன என்ற இடத்தில்  10 முஸ்லிம் இளைஞர்கள்  சுட்டுக்கொல்லப்பட்ட கொலைவழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஐந்து இராணுவ வீரர்கள்  இன்று உச்ச நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி தேர்தல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டு கொழும்பு நீதிமன்றினால் தண்டனை வழங்கப்பட்டிருந்த இராணுவ வீரர்கள் ஐவருமே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேல் முறையீட்டு நீதிமன்றில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் செய்த முறையீட்டை அடுத்து,  பிரதம நீதிபதி தலைமையில் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு இந்த ஐவரையும்  நிரபராதிகள் என விடுதலை செய்துள்ளது. இவ்வழக்கின் குற்றவாளிகள் மீதான குற்றங்களை நிருபிப்பதற்கான சாட்சியங்கள் சந்தேசங்களுக்கு அப்பால் நிருபிக்கப்படவில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இவர்கள் முன்னாள் பாதுகப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தவின்  மெய்ப்  பாதுகாவலர்களாக செயற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *