யாழ்ப் பாணத்தில் அலுவலக உத்தியோகஸ்தர்களுக்கான விசேட பஸ் சேவையொன்று இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. பொது மக்கள் மற்றும் அரச தனியார் ஊழியர்களின் நன்மை கருதி பருத்தித்துறையிலிருந்து யாழ் நகர் வரை இச்சேவை நடத்தப்படவுள்ளதாக போக்குவரத்து சபை யாழ் முகாமையாளர் கே. கணேஷபிள்ளை தெரிவித்தார்.
யாழ். குடாநாட்டில் போக்குவரத்து நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் மேலும் பல பஸ் வண்டிகள் யாழ். டிப்போவுக்கு வழங்கப்படும் என்றும் பழுதடைந்த பஸ்வண்டிகள் உடனடியாகத் திருத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். யாழ். அலுவலக உத்தியோகஸ்தர்களுக்கான மற்றொரு சேவை விரைவில் கொடிகாமமத்துக்கும் யாழ்பாணத்துக்கும் இடையில் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.