ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை மேல்கொத்மலை நீர்மின்சார உற்பத்தித் திட்ட அமைப்புப் பணிகளை நேரில் பார்வையிடுதவற்கான திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அமைப்புப் பணிகளை பார்வையிட்ட ஜனாதிபதி குறிப்பிட்ட காலத்துக்குள் அல்லது அதற்கு முன்னர் இத்திட்டத்தை நிறைவு செய்ய துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
மேல்கொத்மலை நீர் மின்சார உற்பத்தித் திட்டம் 2006 ஆம் ஆண்டு ஜப்பான் அரசின் நிதியுதவியில் ஆரம்பிக்கப்பட்டது. 950 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் இத்திட்டத்தை 2011 ஆம் ஆண்டில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அமைச்சர்களான ஜோன் செனவிரத்தன, கெஹெலிய ரம்புக்வெல, மஹிந்தானந்த அளுத்கமகே, மற்றும் மத்திய மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ ஆகியோரும் அரச உயர் அதிகாரிகளும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர்.