வடக்கிலுள்ள இடம்பெயர்ந்த மக்களின் மனிதாபிமானத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்காக ரஷ்யா ஐந்து இலட்சம் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியிருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் வரவு செலவுத் திட்டத்துக்கான ரஷ்யாவின் வருடாந்த தன்னார்வ பங்களிப்பின் ஒரு பகுதியாகவே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதி ஜெனீவாவில் உள்ள ரஷ்யாவின் தூதுவரும் ஐ.நா. வுக்கான நிரந்தரப் பிரதிநிதியுமான திரு. கெலரி லொஸ்சினீ மூலம் ஜெனீவாவில் இருக்கும் ஐ.நா. வுக்கான இலங்கைத் தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான கலாநிதி தயான் ஜயதிலக்கவினூடாக வழங்கப்பட்டதாகவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.