முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவமதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமெரிக்க விமான நிறுவனமான கொன்டினென்டல் எயார்லைன்சிடம் இருந்து தனக்கு மன்னிப்பு கடிதம் எதுவும் வரவில்லை என அப்துல் கலாம் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை டில்லி விமான நிலையத்தில் வைத்து சோதனைக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் கொன்டினென்டல் எயார்லைன்ஸ் வருத்தம் தெரிவித்து, கலாமுக்கு நேர்ந்த அசௌகரியத்துக்கு மன்னிப்பு கேட்பதாக கூறியது.
மேலும் அவருக்கு மன்னிப்பு கடிதம் ஒன்று அனுப்பியதாகவும் கூறியது. இந்நிலையில் அவ்வாறு மன்னிப்பு கடிதம் ஏதும் கிடைக்கவில்லை என அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை அவமரியாதையாக கருதுகின்றீர்களா என அவரிடம் கேட்டதற்கு, இது குறித்து பாராளுமன்றத்தில் நிறையவே பேசப்பட்டு விட்டது என கூறி முடித்தார்.