முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் மீதான அனுதாபப் பிரேரணைகள் சபையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றன. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அலிக் அலுவிகார, ஹரேந்திரகொரயா, ஐயூப், ராஜா குலதிலக ஆகியோர் மீதான அனுதாபப் பிரேரணைகளே இடம்பெற்றன.
இந்த அனுதாபப் பிரேரணையில் அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, ரிசாட் பதியுதீன், நியோமல் பெரேரா, எம்.பிக்களான ஜோசப்மைக்கல் பெரேரா, லக்ஷ்மன் செனவிரட்ன, ரவூப்ஹக்கீம், இபாம், ஸ்ரீகாந்தா உட்பட பலர் உரையாற்றினர்.