புலிகளின் புதிய தலைவர் திரு செல்வராசா பத்மநாதன்(கேபி) சனல் 4 தொலைக்காட்சியில்

இன்று 22ம் திகதி மாலை 7மணி (சனல்4) CH4 தொலைக்காட்சியில் புலிகளின் புதிய தலைவர் திரு செல்வராசா பத்மநாதனின் பதிவு செய்யப்பட்ட பேச்சுக்கள் ஒளி பரப்பப்பட்டது. இதில் தாம் புலிகள் ஆயுதப்போராட்டத்தை கைவிட்டுள்ளதாகவும், இலங்கை அரசு இன்று வரையில் அரசியல்த்தீர்வு யோசனையில் இல்லை என்பதையும்,
தமிழ்மக்கள் தமது சுதந்திர வாழ்விற்காகவே தான் மீண்டும் இந்த அமைப்பை பொறுப்பேற்றுள்ளதாகவும், தமது 1500 பேர்வரையிலான போராளிகள் இன்னமும் இலங்கைக் காடுகளில் இருப்பதாகவும், புலிகளால் மீண்டும் ஒரு இராணுவ தயார்படுத்தலை செய்ய முடியும் என்பதை மறைமுகமாகவும் தெரிவித்தார்.

இன்றய இந்த தனது வெளிப்படுத்தலின் மூலம் புலிகளின் இருப்பை திரு செல்வராசா பத்மநாதன் நிரூபிக்க முயற்ச்சித்துள்ளார். இதற்கு பதில் அளித்த பிரித்தானியாவிற்கான இலங்கைத் தூதுவர் புலிகள் இயக்கம் இல்லை. இலங்கையில் தமிழர்கள் முகாம்களில் துன்புறுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியாக ஆயுதங்களை வாங்கி புலிகளை பலப்படுத்தியவர் இன்று அந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவராகி தாம் ஆயுத வன்முறைக் கலாச்சாரத்தைக் கைவிட்டுள்ளதாக தெரிவிக்கின்றார் என CH4 தொலைக்காட்சி தெரிவித்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 Comments

  • நண்பன்
    நண்பன்

    இவர் என்ன ஆயுதத்தை கைவிட்டதாகவும் சொல்லி, புலிகளால் மீண்டும் ஒரு இராணுவ தயார்படுத்தலை செய்ய முடியும் என்பதை மறைமுகமாகவும் தெரிவிக்கிறார் என்றால் அர்த்தம் என்ன? ஓம் அல்லது இல்லை. அது ஓமும் இல்லை. இல்லையும் இல்லை. ………….

    Reply
  • santhanam
    santhanam

    தமிழன் நான்குகால் கதிரைக்கு சொந்த இனத்தையே அழிப்பான் இது தான் கே;பி என்ற உலககிரிமினலும் அவரது சீடர்களும் முனைப்புடன் புலத்தில் தமிழ்ழம் அமைக்கவுள்ளனர்.

    Reply
  • nsk
    nsk

    நண்பன்……….. அவர் என்னத்தை தான் சொல்லுறது. எது சொன்னாலும் உங்களுக்கு பிரச்சினை தான். அவங்களுடைய நிலமயையும் யோசியுங்கோ.

    நன்றி
    வணக்கம்

    Reply
  • sekaran
    sekaran

    அடப்பாவி! இன்னும் 1500 புலிகளை தயார்நிலையில் இலங்கைக்காடுகளில் வைத்திருக்கிறாராமே! அகதி முகாம் மக்களே இன்னும் அஞ்சு வருஷமோ அல்லது பத்து வருஷமோ அங்கேயே இருக்க முயற்சி செய்யுங்கள். மிச்சம் இருக்கிற தமிழ்மக்களே மேலும் கெடுபிடிகளுக்கு உங்களை தயார் செய்துகொள்ளுங்கள். எங்கள் அண்ணர் கேபி நம்மையெல்லாம் உயிரோடு காவு கொடுத்து தமிழீழம் வாங்கித்தருவார். நாம் மேல்லோகத்திலிருந்து பார்த்து மகிழலாம்!

    Reply
  • chad
    chad

    k p anna is a 50 50 before prapakaran and affter prapakaran thats a good one my best wishes for over new tamil eelem .

    Reply
  • Sendoor
    Sendoor

    தமிழர்களை அளிப்பதேன்றே பத்மநாதன் முடிவெடுத்து விட்டார்.

    மாவீரர் தினத்தில் பெரிய அளவில் உண்டியல் குலுக்கல் இருக்கு என்றியல்

    Reply
  • பூனை
    பூனை

    பத்மநாதன் தலைமயிலான புலி மட்டுமல்ல, இந்த புலியில் தங்கியிருந்து அரசியல் செய்யும் புலி எதிற்பு பண்டிதர்களும் தொடர்ந்தும் தங்களது வியாபாரம் செய்ய முடியாது.

    பத்மநாதனை மட்டுமல்ல மகிந்தவின் ……….. அடிபடும் TNA விலுருந்து Stuutgart நகரில் கூடிய குழுவினர் வரை தமிழ் மக்கள் எட்ச்ரிக்கையாக இருக்க வேண்டும்

    Reply
  • kumarathasan
    kumarathasan

    its more like,if you funny with me am going to funny with you as well.does it works i dont thinks so.we dont want vicramathiththan story again.let us live.only solution is live tigether.we had enough.we cant have another mullivaikal again.

    Reply
  • tamil boy
    tamil boy

    The new LTTE leader tells us his people are dying in camps while he has men under arms. Jonathan Miller reports. 22 Jul 2009
    http://link.brightcove.com/services/player/bcpid1184614595?bctid=30329159001

    கேபியின் வீடியோவைப் பாருங்கள். முகத்தைக் காட்ட முடியாதவர் கதைக்கத் தெரியாதவர் கையைப் பிசைந்து பிசைந்து கொண்டு. இவருக்கெல்லாம் தலைப்பீடம்.

    Reply
  • சவுக்கு
    சவுக்கு

    பத்மநாதன் தலைமையிலான புலி, சில வேளைகளில் வேறை வடிவத்திலும் புலி என்று வரும். ஆனால் தமிழ் மக்கள சுலபமாக அடையாளம் கண்டு கொள்வர்.

    ஆனால் கண்ணுக்குள் எண்ணை விட்டுக்கொண்டு இருக்க வேண்டும் புலி எதிர்ப்பு நபர்களுடன். இவர்கள் வாய் திறந்தால் ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் போல் ஒரே வடிவத்தில் வருவார்கள். இந்த வடிவத்திற்கு பின்னால் பல வேசங்கள் எடுப்பார்கள்.

    யாழ்ப்பாணத்தில் தேர்தலில் நிற்பார்கள், ஆயுதக் குழு அங்கே கிடையாது என்பார்கள். ஒற்றுமை வேணும் என்பார்கள். சோசலிசம் என்பார்கள் மறுகணம் ஸ்ரீலங்கா அரசு ஜனநாயகம் என்பார்கள். ஸ்ரீலங்கா தூதுவருக்கு கடிதம் எழுதுவார்கள். Stuutgart இல கூடி நிற்பார்கள் London இல பிரிந்து நிற்பார்கள். முகாம்களுக்கு காசு சேர்ப்பார்கள், கணக்கும் காட்டுவார்கள். புலித் தோலை காட்டி தங்கள் தோலை பாதுகாத்து கொள்வார்கள்.

    புலம் பெயர்ந்த, புலி பெயர்ந்த மக்களே மிகவும் கவனம்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    அமரர் அன்டன் பாலசிங்கத்தை கைது செய்து எந்தக் கட்டிலில் படுக்க வைத்திருந்தார்களோ, அதே கட்டிலில், இரண்டு மூன்று நாட்கள் நானும் கைது செய்யப்பட்டு படுக்க வைக்கப் பட்டிருக்கிறேன். மேலே உள்ள வீடியோவில் இருப்பது அவர்தான் என்பது(கே.பி.) உண்மையென்றால், அவருக்காக பரிதாபப் படலாம், ஆனால் ,”ஒரு அரசியலுக்கு” தலைமை தாங்க முடியாது. அவர் “பதற்றமாக” இருக்கிராறோ இல்லையோ அவ்வாறு காட்டப்படுவதை “ஆமோதித்திருக்கிறார்”. கடைசியில் அவரின் நடை, சில “உயர் அதிகாரிகளின்” பிடியில், சிறைவைக்கப்பட்டிருக்கும் “கைதியைப்” போன்றிருக்கிறது.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    கேபி முகத்தைக்காட்டாமல் ஏன் இருக்கிறார் என்பதற்கு பேட்டிக்கு முன்னான கே.பி பற்றிய விளக்கம் கேட்கவும்.
    கதைகத் தெரிந்தோர்தான் தலைமை ஏற்க முடியும் என்றால் அமிர் ‘கதைத்தே’ ஈழம் பெற்றுத்தந்திருக்க வேண்டும். கே பி ஒன்றும் கையைப் பிசையவில்லை மாறாக கைவிரல்களை கோர்த்தும் பிரித்தும் சாதாரண மக்கள் உரையாடுவதைப்போல் செய்கிறார். இதை கையை “ பிசைகிறார்’ என புத்திசாலித்தனமாக ‘கதைக்க’ தெரிந்திருக்கிறது. ……….

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    கே.பி போன்றவர்கள் வன்னி மக்கள் நிம்மதியாக வாழக்கூடாதென்பதிலேயே குறியாகவிருக்கின்றார்கள். அவர்கள் நிம்மதியாக வாழும் நிலை தோன்றினால், இவர்களால் தொடர்ந்து அரசியல் பேசி புலிகளின் சொத்துகளை அபகரிக்க முடியாது போய்விடும். சில விடயங்கள் நடக்காதென்று தெரிந்தாலும், அவற்றைச் செய்து காட்டுவோமென்று பீலா விட்டே காலம் கடத்துவார்கள். இதற்கு ஜால்ரா அடிக்கவும் ஒரு கூட்டம் கங்கணம் கட்டிக் கொண்டு அலைகின்றது. இவர்களின் நடவடிக்கைகள் எப்படியிருக்குமென்பதற்கு “வணங்காமண்” நடவடிக்கை ஒன்றே சாட்சி. எல்லாவற்றிற்கும் மேலாக சனல் 4 இல் தோன்றியவர் உண்மையில் கே.பியா அல்லது சனல் 4 தொலைக்காட்சிக்கு இவர் தான் கே.பி என்று இன்னொருவர் கே.பியின் ஏற்பாட்டில் வந்து போனாரா என்பதும் கே.பிக்கும், கே.பிக்கு தமது பிழைப்பிற்காக வால் பிடிப்போருக்கும் தான் வெளிச்சம்.

    Reply