ஈ.பி.டி.பி.யுடன் தமிழ் மக்கள் அணி திரண்டால் ஒளிமயமான எதிர்காலத்தை விரைவில் பெற முடியும் – தேவானந்தா

Douglas Devananda“13 ஆவது அரசியல் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி மேலதிக அதிகாரங்களை வழங்குமாறு நாம் கேட்டுள்ளோம். அதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசு ஏற்றுக்கொண்டு சர்வதேச சமூகத்திற்கும் எமது மக்களுக்கும் இதனை அறிவித்துள்ளார். அதனை விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எங்களுடைய அரசியல் அதிகாரங்களைப் பலப்படுத்துவதன் ஊடாக இந்த நகரசபைத் தேர்தலில் எமது கட்சியின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலம் நாம் அரசுடன் பேரம் பேசக்கூடிய அளவிற்கு சக்தி கொண்டவர்களாக வரமுடியும்’ என்று சமூகசேவைகள் சமூக நலத்துறை அமைச்சரும் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானத்தில் நடைபெற்ற வவுனியா நகரசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் ஈ.பி.டி.பி.யின் ஆறு வேட்பாளர்களையும் ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்திற்கு செல்வராசா சந்திரகுமார் தலைமை தாங்கினார்.

அமைச்சர் தொடர்ந்தும் இங்கு பேசுகையில் குறிப்பிட்டதாவது;  “ஜனாதிபதித் தேர்தல் விரைவில் வரவுள்ளது. தற்போதைய ஜனாதிபதி இந்தத் தேர்தலில் போட்டியிடப் போகின்றார்.  தமிழ் மக்களாகிய நாங்கள் பெருமளவு வாக்குகளை அவருக்கு வழங்குவதன் மூலம் அந்த உறுதி வெளிப்படுத்துவதன் ஊடாக எமது எதிர்கால அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்புகள் உள்ளது.

ஆயுதப் போராட்டத்திற்குரிய தேவை ஒரு கால கட்டத்தில் இருந்தது. அந்தப் போராட்டத்தின் ஊடாக இலங்கை இந்திய ஒப்பந்தம் என்றதொன்றை பெற்றிருந்தோம். அதனை நாம் சரிவரப்பயன்படுத்தவில்லை. அது ஒரு பொன்னான வாய்ப்பு. அதற்குப் பிறகும் பல வாய்ப்புகள் எமக்குக் கிடைத்திருந்தது. அதனையும் தமிழ்ச் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களும் ஜனநாயக வழியூடாக வந்த தலைவர்களும் சரி அல்லது ஆயுதப் போராட்டத்தின் ஊடாக வந்த தலைவர்களும் சரி அதனை சரிவரப் பயன்படுத்தவில்லை.  மீண்டும் ஒரு சந்தர்ப்பம் எமக்குக் கிடைத்துள்ளது. அதனை சரிவரப் பயன்படுத்த வேண்டும். எமது மக்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பல உள்ளது. வீதிகள், குடிநீர்ப் பிரச்சினை, மின்சாரம், தடைகளற்ற போக்குவரத்து அவ்வாறு பல பிரச்சினைகள் உள்ளது. இதனை தீர்ப்பதற்காக திட்டங்களும் அதற்கான வலுவும் எங்களிடம் உள்ளது.

எங்களுக்கு தேவை மக்களுடைய ஆதரவு, பக்கபலம். இவை எங்களிடம் இருக்குமாக இருந்தால் நாங்கள் கடந்த 20 வருட தேவையற்ற யுத்தத்தில் அழிந்துபோன பிரதேசங்களை வரும் இரண்டு ஆண்டுகளில் கட்டியெழுப்பி அபிவிருத்தி செய்ய முடியும். எங்களோடு அணிதிரண்டு வந்தால் ஒரு விரைவான ஒளிமயமான எதிர்காலத்தை நாம் காண முடியும்’ என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • சாந்தன்
    சாந்தன்

    …“ அதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசு ஏற்றுக்கொண்டு சர்வதேச சமூகத்திற்கும் எமது மக்களுக்கும் இதனை அறிவித்துள்ளார்…../

    ஆமாம்….நீங்கள் கோரியிருக்கிறீர்கள் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் கொடுப்பது என்று சொல்லவில்லையே. 13ம் திருத்தம் தேவையில்லை..13+ என்று ஒண்டு கொண்டுவரலாம்…எல்லாத்துக்கும் மேலால சிறுபான்மை எண்டு ஒண்டில்லை என ”ஆப்பு” வைத்திருக்கிறார் கவனிக்கவில்லையா? உங்களுக்கு ஆப்புகள் விளங்காது. நீங்கள் அகமகிழ்ந்திருக்கிறீர்கள்!
    அண்மையில் திஸ்ஸ விதாரண என்ன சொல்லி இருக்கிறார் என்பதையும் கேட்கவும்.

    ’…. அதனை விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எங்களுடைய அரசியல் அதிகாரங்களைப் பலப்படுத்துவதன் ஊடாக இந்த நகரசபைத் தேர்தலில் எமது கட்சியின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலம் நாம் அரசுடன் பேரம் பேசக்கூடிய அளவிற்கு சக்தி கொண்டவர்களாக வரமுடியும்’
    அப்ப இவ்வளவு நாளும் நகரசபைக்காரர் அரசுடன் பேசமுடியாமல் இருந்தவையளோ? அமைச்சரே பேசேலாமல் இருந்தவர் தானே?
    உப்பிடித்தாம் 1977இல் அமிரும் சொன்னவர்.. உலகமே உற்று நோக்குது.. கவனிக்குது.. திரும்பிப்பாக்குது… வெளவால் வருது..பழம் போடுது எண்டு!

    “ஜனாதிபதித் தேர்தல் விரைவில் வரவுள்ளது. தற்போதைய ஜனாதிபதி இந்தத் தேர்தலில் போட்டியிடப் போகின்றார். தமிழ் மக்களாகிய நாங்கள் பெருமளவு வாக்குகளை அவருக்கு வழங்குவதன் மூலம் அந்த உறுதி வெளிப்படுத்துவதன் ஊடாக எமது எதிர்கால அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்புகள் உள்ளது….’

    மஹிந்தா எல்லோரும் எங்கட மக்கள் என்கிறார். ஆனால் நீங்கள் என்னவோ வோட்டுப்போட்டால் தான் தருவார் எண்ட மாதிரிச் சொல்லுறியள்!
    தனித்துவமான கட்சி எண்டியள்…இப்ப சின்னமே பறிபோயிட்டுது. அதுக்குள்ள மக்களை ஏன் இழுக்கிறியள். முதலில உங்கட ஆதரவாளர் உங்கட சின்னத்தில கேட்கச்சொல்லி கேட்டபோது இரண்டு நாளில சொல்லுறன் எண்டு ஸ்ரீதரில வச்சு மணிக்கதை விட்டனியள்!

    ’…ஆயுதப் போராட்டத்திற்குரிய தேவை ஒரு கால கட்டத்தில் இருந்தது….’/
    ஓமோம்…நீஙகள் செய்யும்வரையும்.

    ’..அந்தப் போராட்டத்தின் ஊடாக இலங்கை இந்திய ஒப்பந்தம் என்றதொன்றை பெற்றிருந்தோம்….’/
    சங்கரியும் அமிரும் ஏதோ தாங்கள் தான் இந்தியாவோட கதைச்சு எடுத்த எண்டெல்லோ சொன்னவை?

    ’… அதனை நாம் சரிவரப்பயன்படுத்தவில்லை….’
    இவளவு காலமும் புலியள் எண்டு சொன்னியள். இப்ப ‘நாம்’ என்கிறியள்? என்ன நடக்குது?

    ’….. அதனையும் தமிழ்ச் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களும் ஜனநாயக வழியூடாக வந்த தலைவர்களும் சரி அல்லது ஆயுதப் போராட்டத்தின் ஊடாக வந்த தலைவர்களும் சரி அதனை சரிவரப் பயன்படுத்தவில்லை…./
    கள்ளவோட்டில வந்தவையளை ஏன் சேர்க்காமல் விட்டனியள்?

    ’…. இதனை தீர்ப்பதற்காக திட்டங்களும் அதற்கான வலுவும் எங்களிடம் உள்ளது…’’/
    அப்ப ஏன் மக்களை மாட்டுறியள். வலு இருந்தால் செய்து முடியுங்கோ.

    Reply
  • பூனை
    பூனை

    சிங்கள, தமிழ் முதலளித்துவங்களின் உறவில் டக்லஸ் எடுத்த பாதை ஏனைய குழுக்கள் பின்பற்றுவது சாகமுதல் அனுபவித்து சாவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கும். பிரபாகரன் எல்லாம் ஒரு முறையில் வேணும் எண்டு தான் கடைசியா கோவணத்தோடை போனவர்

    சிங்கள, தமிழ் முதலளிதுவங்கள் சம அந்தஸ்தில் இருப்பதை சிங்கள முதலாளித்துவம் ஒரு போதும் அனுமதிக்க முடியாதது. 1948 இல் தொடங்கிய சம அந்தஸ்தை பெறுவதற்கான இந்த முயற்சி நந்திக்கடலில் இறுதி முடிவுக்கு வந்தது. தமிழ் முதலாளிகள் இலங்கை தீவை சுரண்டுவதில் இளைய பங்காளிகளாக தான் இருக்க முடியும். சுரண்டலுக்கான வரிசை ஏகதிபத்தியம், இந்தியா, சீனா ஏனைய நாடுகள். இவர்களின் உள்நாட்டு முகவர்களாக சிங்கள முதலாளித்துவம் அதன் உதவியாளனாக தமிழ் முதலளித்துவம். அரசியல் செய்யும் குழுக்கள் கட்சிகளில் இருந்து வன்னியில் அகதிகளுக்கு சமுக சேவைகள் செய்யும் குழுக்கள் வரை இந்த விதிக்கு உட்பட்டவர்கள்.

    இந்த விதியினை முழுமையாய் மிகவிரைவில் விளங்கிகொண்டவர் கருணா. டக்லஸ் ஒரு முன்னோடியாக இருந்தும் கூட புலியின் முடிவிற்கு பின்னர் தான் மகிந்தவின் கட்சியில் சேர யோசனை செய்கின்றார். அவர் சேர்ந்ததன் பின்னர் சங்கரி, சித்தர், ஸ்ரீ கொம்பனியின் எதிர்காலம் தெரியும். மதில் மேல் இருந்து தப்பி தவறி அரசு மாறினால் எங்கை குதிப்பது என்பதை தீர்மானிக்கலாம்.

    பத்மநாதன் மிச்சமா இருப்பதை கூட்டிக் கட்டி முடிந்தால் தொடர்ந்து காசு சேர்க்க முயற்சிக்க வேண்டியது தான் மிஞ்சி இருக்கின்றது. தமிழ் முதலாளித்துவத்தின் பாரம்பரிய தட்டுக்கள் புலியின் ஆதரவாளர்களாக தொடர்ந்தும் இருந்தாலும் தற்போது இவர்களது பங்கு டக்லஸ், கருணாவிற்கு தான் சொந்தம்

    Reply
  • rohan
    rohan

    //சிங்கள, தமிழ் முதலளித்துவங்களின் உறவில் டக்லஸ் எடுத்த பாதை ஏனைய குழுக்கள் பின்பற்றுவது சாகமுதல் அனுபவித்து சாவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கும். பிரபாகரன் எல்லாம் ஒரு முறையில் வேணும் எண்டு தான் கடைசியா கோவணத்தோடை போனவர்//

    அந்தக் காலத்துத் தமிழ்ப் புத்தகத்திலேயே சுதந்திரமான பட்டினி வாழ்வு பற்றியும் வசதியாக வாழும் தஙத்தட்டு அடிமை வாழ்வு பற்றியும் நாங்கள் படித்திருக்கிறோம் அல்லவா?

    Reply
  • பூனை
    பூனை

    rohan on July 23, 2009 12:43 am
    இந்த கருத்து தமிழ் முதலாளித்துவத்தின் எதிர் காலம் பற்றியது. பட்டினியால் வாழும் தீவின் மக்களை பற்றியதில்லை.

    தீவின் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்றால் சிங்கள, தமிழ் முதலாளித்துவத்தை தோற்கடிக்க வேண்டும்.இதைவிட வேறு வழி கிடையாது.

    அடிமையாக வாழ்வதைவிட மரணம் மேலானது என்பது தேசியவாதிகள் ஒடுக்கப்பட மக்களை பலிகொடுத்து தங்களை பாதுகாக்கும் ஒரு
    கோசம்.

    Reply