கடந்த பத்து நாட்களில் கனடாவில் இரண்டு தமிழ் இளைஞர்கள் படுகொலை

canada_flag.gifகனடாவில் மற்றுமொரு தமிழ் இளைஞர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  கனடாவின் ஸ்கார்புறோ வடக்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த பத்து நாட்களில் கனடாவில் இரண்டு தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

டெய்ஸி மார்ட் என்னும் கடைத் தொகுதிக்கு அருகாமையில் வைத்து நேற்று நள்ளிரவு 20 வயது மதிக்கத்தக்க குறித்த இளைஞர் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  ஐந்து பேரைக் கொண்ட குழுவொன்று ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் படுகொலை செய்யப்பட்ட கிறிஸ்டியன் தனபாலன் படுகொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் இந்த இரண்டாவது படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  இவ்வாறான மிலேச்சத் தனமான படுகொலைகள் தடுக்கப்பட வேண்டுமென கனேடிய தமிழ் காங்கிரஸின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை தெரிவித்துள்ளார். இன்னுமொரு இளைஞரை பரிதாபமாக பலிகொடுக்க நாங்கள் தயாரில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1990 மற்றும் 2000மாம் ஆண்டுகளில் தமிழ் இளைஞர் வன்முறைகள் அதிகமாகக் காணப்பட்டதாகவும் பின்னர் அந்த நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வன்முறைகளைத் தடுத்து நிறுத்த விசேட செயற் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கனடாவில் எவரும் படுகொலை செய்யப்படக் கூடிய சூழ்நிலை காணப்படவில்லை எனவும், உலகின் மிகவும் அமைதியான சூழ்நிலை கொண்ட நாடுகளில் கனடாவும் ஒன்று எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து கனடாவில் குடியேறியுள்ள சகல தமிழ் பெற்றோர்களும் தங்களது பிள்ளைச் செல்வங்களின் நலன் கருதியே இங்கு வந்துள்ளார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

 • Anonymous
  Anonymous

  தொடரும் வன்முறைக்கு விடுதலைப்புலிகளே நேரடிக் காரணம். ஆரம்ப காலங்களில் இநத வன்முறையை ஆதரித்து பயிராக்கினார்கள். அதன் பின்னரும் புலிகளோ புலி எதிர்ப்பாளர்களோ இந்த வன்முறையை இல்லாதொழிக்க செயற்படவில்லை.

  Reply
 • Kumaran
  Kumaran

  இரண்டாவதாக நடந்தது புலி சம்மந்தப்பட்ட கொலை

  இனிவரும் காலத்தில் எமது தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளுக்கு அமைவா நடப்போம் என்று ஏற்கனேவே பத்மநாதன் சொன்னார் அதாவது தலைவர் விட்ட இடத்தில இருந்து பத்மநாதன் கொலைகளுக்கு தலைமை தாங்குவர் என்று.

  புலிகளின் தாகம் தமிழர்களின் ரத்தம்

  Reply