இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களை கொன்று குவித்தவர்கள் எங்களுக்கு மனித உரிமைகள் பற்றி போதிக்கின்றனர் – ஜனாதிபதி

mahinda_raajapakse11.jpgஇலங்கையில் ஊவா வெல்லஸ்ஸவில் இடம்பெற்ற பெரும் கிளர்ச்சியைத் தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்ட எல்லா இளம் ஆண்களையும் கொன்று குவித்த சில சக்திகள் இன்று எமக்கு மனித உரிமைகள் பற்றி போதிக்கின்றனர். கடந்த காலங்களில் அவர்கள் மேற்கொண்ட இந்த படுகொலைகளை மறைப்பதற்காகவே நமது நாடு மனித உரிமைகளை மீறுவதாக இப்போது குற்றம் சாட்டுகின்றனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பிரித்தானிய காலணித்துவ வாதத்திற்கு எதிராக 1818 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற பெரும் கிளர்ச்சி நடந்தேறிய பண்டைய வெல்லஸ்ஸ பிரதேசத்தின் பெலவத்த சீனித்தொழிற்சாலை வளாகத்தில் இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இப்பிரதேசத்தின் மிகப்பெரும் நீர்ப்பாசன திட்டங்களை அவர்கள் தகர்த்ததன் மூலம் தன்னிறைவு பொருளாதாரத்தை திட்டமிட்ட முறையில் நசுக்கினர். மிகவும் வளம்பொருந்திய இப் பகுதி வறுமை மிக்கதொரு பகுதியாக மாற்றப்பட்டது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று எமது வீரமிக்க படைவீரர்களால் பாதுகாக்கப்பட்டுள்ள இந்த நாட்டைப் பாதுகாப்பதற்கு ஒவ்வொரு பிரஜையும் தன்னால் இயலுமான முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி ஏகாதிபத்தியவாதிகளால் நிர்மூலமாக்கப்பட்ட நீர்ப்பாசனத்திட்டங்களை தனது அரசாங்கம் மீள் கட்டமைத்து முன்னிருந்ததைப் போன்று இந்தப் பிரதேசத்தை வளம் மிகுந்த ஒரு பிரதேசமாக மாற்றியமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நாட்டைக் கட்டியெழுப்பி நாட்டு மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத்தரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக சிறிய உள்ளுர் அமைப்புகள்ää மாகாணசபைகள்ää மத்திய அரசாங்கம் எல்லாம் ஒன்றுசேர்ந்து ஒரு வினைத்திறன்மிக்க இயந்திரத்தின் சில்லுகள் போன்று ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

 • true lankan
  true lankan

  mr,president, all your family holding western countries residence . dont make people fool.

  Reply
 • மகுடி
  மகுடி

  president, family holding western countries residence , it is not a offence? More Sri lankan tamils having Citizenship then sinhaleese? But most of them are mad.

  Reply
 • msri
  msri

  அவர்கள் 18வயதிற்கு மேற்பட்டவர்களைக் கொன்று குவித்தார்கள்! நீங்கள் கர்ப்பப் பையில் இருந்த சிசுவில் இருந்து> சின்னஞ் சிறிசுகள் ஈறாக எல்லோரையும் அல்லவா கொன்று குவித்தீர்கள்!

  Reply