சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வெள்ளிக்கிழமை கிடைக்கும் – அமைச்சர் சியம்பலாப்பிட்டிய இன்று சபையில் அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அரசாங்கம் கோரியிருந்த கடன்தொகையின் முதலாம் தொகுதி நிதி எதிர்வரும் வெள்ளிக்கிழமை கிடைக்கவுள்ளதாக அரச வருமான மற்றும் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்திடம் நாம் கோரியிருந்த கடன்தொகை நிச்சயம் கிடைக்கும் என்பதை இச்சபையில் பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன்.

அரசாங்கம் 190 கோடி அமெரிக்க டொலர்களைக் கடனாகக் கோரியிருந்தபோதும் 250 கோடி அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணங்கியுள்ளது. இந்த நிதி 20 மாதங்களுக்குள் 8 தவணைகளில் கிடைக்கவுள்ளது. முதலாம் தவணையில் வழங்கப்படும் நிதிக்கு .5 வீத வட்டியே அறிவிடப்படவுள்ளது. மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளுக்கு ஏற்ப இதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • Kusumbo
    Kusumbo

    இதைப்பற்றி நான் முதலே எழுதியிருந்தேன். அமெரிக்காவின் இரட்டைவேடம் இது வென்றும், நிதியுதவி இலங்கைக்கு நிச்சயம் கிடைக்கும் என்று. அமெரிக்கா தன்னை நல்லவர்களாக உலகத்துக்குக் காட்டும் நாடகம்தான் நிபந்தனை நிச்சயம் எல்லாம். ஜோர்ஜ் புஷ் என்றாலும் சரி ஒபாமாவானாலும் சரி எல்லோரும் ஒரு குட்டை மட்டையள் தான்: அமெரிக்கா வரும் என்று பார்த்துக் கொண்டிருந்தவர்களை என்ன சொல்ல.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    சின்னப் பிள்ளைகளுக்கு மிட்டாய் கொடுக்கிறதுக்கு முன்னர் , பெற்றோர் செய்யும் குறும்பு. ஓடி வாங்கோ, ஓடிவாங்கோ என்று மிட்டாய் பார்சலை கையில வச்சுக் கொண்டு சிலுமிசம் செய்யிறது. கடைசியில பிள்ளை வேண்டாம் என்றாலும் துரத்தியாவது குடுப்பாங்கள். அது இதுதான். குசும்புவின் குசும்பு மாதிரி.

    Reply