கப்பம் அல்லது லஞ்ச ஊழல் மோசடியில் ஈடுபடும்; காவல்துறை அதிகாரிகள் குறித்து தகவல்களை வழங்குமாறு பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். காவல்துறை உயர் அதிகாரிகள் சிலர் பல்வேறு வழிகளில் கப்பம் கோரி வருவது தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாதாள உலகக் கோஷ்டியினரைப் பூண்டோடு அழிக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டார். ஆயுதங்களுடன் சரணடையுமாறு பாதாள உலகக் குழுவினருக்கு, பாதுகாப்பு செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்தில் ஆயுதங்களுடன் பாதாள உலகக் குழுவினர் சரணடைய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு அரசியல் தலைவரும் பாதாள உலகக் குழுவினருடன் தொடர்புகளைப் பேணக் கூடாது எனவும் அவ்வாறு பேணுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். துறைமுகத்தில் தேயிலை ஏல விற்பனை நடைபெறும் போது கூட பாதாள உலகக் குழுவினர் லஞ்சம் பெற்றுக் கொள்வதாகத் தமக்கு தகவல் கிட்டியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.