அரச தலைவர் ஒருவர் ஆதிவாசிகளுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய முதலாவது நிகழ்வு

mahi2222.jpgஆதிவாசி சமூகத்தினரின் பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததுடன், அவர்களது பிரதான பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு நேற்று முன்தினம் தீர்வு பெற்றுக் கொடுத்தார். மஹியங்கணையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த தம்பான ஆதிவாசி மக்கள் தங்களது பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறிய போது இந் நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஆதிவாசிகள் அவர்களது சம்பிரதாயப்படி தயாரித்த உணவுகளை ஜனாதிபதிக்கு வழங்கினர். அரச தலைவர் ஒருவர் ஆதிவாசிகளுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய முதலாவது நிகழ்வு இதுவாகும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • Appu Hammy
    Appu Hammy

    He is olso same group, and action no differnt.

    Reply
  • mike
    mike

    அரச தலைவர் ஆதிவாசிகளுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவது போல், அகதி முகாம்களில் தமிழ் அகதிகளுடன் அமர்ந்து என்று உணவருந்துவாரோ அன்றுதான் உண்மையில் தமிழருக்கான விடிவில் ஒளி தெரிய ஆரம்பிக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    புலித் தலைவர் போல் பங்கர் தலைவராக மகிந்த வாழவில்லை. அந்த வகையில் மகிந்த சுப்பர் மேன். விரைவில் வன்னி மக்களை சந்திப்பார். அது குறித்து அவர் படையினரோடு பேசியும் உள்ளார்.

    Reply
  • nsk
    nsk

    நண்பா
    உமது கருத்து தவறானது ஏன்எனில் மஹிந்த மிகவும் பெரிய பங்கரில் உள்ளார். அத்துடன் அறுவது வருடத்திற்கு பிறகும் பங்கர் கதை தான் கதைக்கிறார். நீங்கள் புலிகளையும் தலைவர்யும் திட்டுவது உங்களுக்கு உச்ச கட்டம் தருமாயின் பணிகளை தொடர்ந்து உங்களுடைய இன்பங்களை அடயிங்கோ.

    நன்றி
    வணக்கம்

    Reply
  • true lankan
    true lankan

    nadigar thilagam

    Reply