மேல் மாகாணம், மத்திய மாகாணம், வடமேல் மாகாணம் உட்பட பல பகுதிகளில் நேற்று கடும் மழை பெய்ததாக காலநிலை அவதான நிலையம் அறிவித்தது. அதன்படி, கொழும்பில் ஓரளவு மழை பெய்துள்ளது. களுத்துறை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகக்கூடிய மழை வீழ்ச்சி ஹங்வெல்லயில் பதிவாகியுள்ளது. (63.3 மி. மீ.) அதேவேளை லபுகலவில் 60.6 மி. மீ., கலட்டுவாவயில் 49 மி. மீ., மத்துகமவில் 31.6 மி. மீ. மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் மீண்டும் இடையிடையே பெய்து வரும் கடும் மழை காரணமாக இம்மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக தோட்டங்களில் பால் சேகரிக்கும் பணி, சீவல் தொழில் என்பன முற்றாகவே ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. இதனால் தொழிலாளர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். களுகங்கையின் நீர் மட்டமும் கூடியுள்ளன.