எதிர் வரும் 22 ஆம் திகதி கடல்கோள் ஏற்படுமென மக்கள் மத்தியில் பரவி வரும் செய்தியில் உண்மையில்லையென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், கடல்கோள் அல்லது பூகம்பம் குறித்து பல நாட்களுக்கு முன்னரே அறிவிக்கும் முறை செயன்முறையில் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இவ்வாறு பரவிவரும் செய்திகளில் விஞ்ஞான ரீதியிலான உண்மை கிடையாதென கடற்கோள் முன்னெச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஜப்பானுக்கு அருகில் ஏற்படும் பூகம்பத்தால் இலங்கைக்கு நேரடித் தாக்கமெதுவும் கிடையாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வதந்திகளால் மக்கள் பதற்றமடைய வேண்டாமெனவும் அரச நிறுவனங்களின் எச்சரிக்கைகளையே நம்புமாறும் கடற்கோள் எச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.