ஈரானில் 169 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த அனைவரும் பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது.
காஸ்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் தெஹ்ரானில் இருந்து ஆர்மீனிய தலைநகர் யெரவான் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விழுந்து நொறுங்கியது.
தெஹ்ரானுக்கு வட மேற்கே 75 கி.மீ. தொலைவில் கஸ்வின் என்ற நகருக்கு அருகே ஜன்னதாபாத் என்ற கிராமத்தில் விமானம் விழுந்தது.
விமானம் சிதறிவிட்டதாகவும் அதன் பல பாகங்கள் எரிந்து நாசமாகிவிட்டதாகவும் கஸ்வின் அவசரகால உதவி மையம் தெரிவித்துள்ளது. இதனால் அதிலிருந்த யாரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பிலை என்று தெரிகிறது.காஸ்பியன் ஏர்லைன்ஸ் ஈரான்-ரஷ்யா இணைந்து நடத்தி வரும் கூட்டு நிறுவனமாகும்.