கனடா, ரொறன்ரோவில் கிறிஸ்ரியன் தனபாலன் (வயது 22 என்ற தமிழ் இளைஞன் கும்பல் ஒன்றினால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கனடாவின் ரொறன்ரோ நகரில் கிளமோர்கன் பார்க்கில் கடந்த சனிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் அவர் இறந்து விட்டார். தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் அவர் இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனபாலன் நண்பர்களுடன் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்ததாகவும் இரு குழுவினருக்கும் வாய்ச் சண்டை ஏற்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். மற்றைய குழுவினர் வாகனங்களில் ஏறிச் சென்றுவிட்ட போதும் பின்னர் அவர்கள் திரும்பி வந்ததாகவும் நள்ளிரவில் இரு குழுக்களும் சண்டையிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனபாலும் நண்பர்களும் கிரிக்கெட் மட்டைகளால் தாக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இரு குழுவினரும் தமிழர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
tamil
அட தமிழா உனக்கு எப்போதடா உயிர் பாதுகாப்பு
மகுடி
வன்முறைகளே தமிழரின் கலாச்சாரமாகிவிட்ட நிலையில், இருந்த இடத்திலும் அமைதி இல்லை. போன இடத்திலும் அமைதி இல்லை. போகும் இடத்திலும் அமைதி இல்லை. வாழ்க ஈழத் தமிழர் (கொலைக்)கலாச்சாரம்.
chandran.raja
தமிழ்மக்களின் “விருந்தோபல்” கலாச்சாரம் மனிதகலாச்சாரத்தின் உன்னத பண்பு. தீ யின் ஊடாக பயணித்து வந்தவர்கள் என்பதில் எமது கலாச்சாரத்தை மறந்து விட்டதகாது. ஒவ்வொரு இனத்திற்கும் தனித்தனி தகமைகள் இருப்பது என்பது உண்மையே.
வரும் காலத்தில் துன்பமான காலத்தில் விடுபட்டு வந்தோம்.நாமும் வாழ்வோம், மற்றவரையும் வாழவைப்போம் என்ற உன்னத வாய்மொழியூடாக பயணிப்போம். யாருக்கும் தண்டனை கொடுக்கும் நீதிவான்களாக இருக்காதீர்கள். நீதிமான்களாக இருப்போம் என உறுதிகொள்ளுவோம். அதுவே எமது இனத்தின் அடையளாமாகும்.
thurai
கடல் கடந்த தமிழீழ்த்திற்கான் ஒற்றுகை தான் இது.
இன்னும் தொடரும். வாழ்க புலத்தில் தமிழர் கலாச்சாரம்.
துரை
பார்த்திபன்
இப்படிக் கொலைக் கலாச்சாரத்தை அடிதடிக் குழுக்களையும் உலகமெங்கும் வளர்த்த பெருமை, ஒவ்வொரு நாடுகளிலும் புலியமைப்புகளாக செயற்பட்டவர்களின் கைங்கரியமே. சுவிசில் கூட இப்படியான கலாச்சாரத்தை தொடக்கி வைத்தவர் தற்போது கனடாவில் அகதியாகவிருக்கும் முரளி தானென்பது பலருக்குத் தெரிந்த விடயம்.
Kusumbo
விளையாட்டு வீரர்கள் விளையாட்டாகக் கொலைசெய்கிறார்கள். அண்ணை சொல்லித்தந்துவிட்டுப் போனதை எப்படி விடுவது. போடுங்கோ மாறி மாறி அண்ணன் மேலை சத்தியம்.