இலங்கையில் இருந்து தோணியில் புறப்பட்டு, நடுக்கடலில் இறக்கிவிடப்பட்ட இலங்கைத் தமிழ் எழுத்தாளர் உட்பட மூவரை மீனவர்கள் மீட்டனர். ராமேஸ்வரம் அருகில் மூன்று பேர் நடுக்கடலில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த தகவலையடுத்து, கடலோர காவல்படையினர், கப்பல் படை, கடலோர பாதுகாப்பு குழுமத்தைச் சேர்ந்த படையினர் கடற்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ராமேஸ்வரம் ஐந்தாம் தீடை அருகே தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த மூன்று பேரை மீனவர்கள் காப்பாற்றி, பத்திரமாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த திருநாவுக்கரசு, சுகந்தன், வவுனியாவை சேர்ந்த யோகராஜ் என்பது தெரியவந்தது. அவர்களில் திருநாவுக்கரசு, இலங்கையில் பல தமிழ் நூல்களை எழுதிய, எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
romeo
வெகு விரைவில் 5ம் தீடைப்புட்டியிலும் இடைத்தங்கல் முகாம் ஒன்று அமைத்து யு.என்.எச்.சி.ஆர்- பிரிவை அங்கு தங்கவைத்தால் மிக உதவியாக இருக்குமென எண்ணத் தோன்றுகிறது. ஐ.சி.ஆர்.சி., இதற்கு ஆட்சேபனை தெரிவிக்காதிருந்தால்.