அனைத்து மக்களும் ஓரணி திரண்டால் இழந்தவற்றை மீளப் பெற்றுக்கொள்ள முடியும்

21deva.jpgகடந்த இருபது வருடகால யுத்தத்தால் இழந்துள்ள அனைத்தையும் மீளப் பெற அனைத்து மக்களும் ஓரணி திரண்டால் இலக்கை இலகுவாக எட்டிவிட முடியுமென ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும் சமூக சேவை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை குடாநாட்டில் வறிய குடும்பங்களை மேம்படுத்தும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளீடுகளை வழங்கும் நிகழ்வு நெடுந்தீவு கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு உரை நிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா;

எமது மக்கள் கேட்கும் முன்பதாகவே உதவிகளைச் செய்து வரும் நாம் எமது மக்களை ஒருபோதும் கையேந்தும் நிலைக்குத் தள்ளமாட்டோம் என்றும் எனினும் தவறான தலைமைத்துவங்களினால் எமது மக்கள் அவ்வாறானதொரு நிலைக்குத் தள்ளப்பட்டு இப்போது தான் அந்நிலைமையில் இருந்து எமது மக்களை மீட்டெடுத்து வரும் நிலையில் மீண்டும் அம்மக்களை படுபாதாளத்தில் தள்ளிவிட சில தீய சக்திகள் வேஷம் போட்டுக் கொண்டு மக்கள் முன்வர எத்தணிக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வில் உரையாற்றிய பலரும் நெடுந்தீவு மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆற்றியுள்ள சேவைகள் தொடர்பில் பாராட்டிப் பேசினர். நெடுந்தீவின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்ற மேம்பாட்டுத் திட்டங்கள் யாவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்கொள்ளப்பட்டவை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 Comments

  • rohan
    rohan

    நாம் அப்படி எதை இழந்தோம், தோழர்?

    Reply
  • palli
    palli

    ஓரணி அது எந்த அணி??
    சும்மா கூச்சபடாமல் சொல்லுங்கோ; அது மகிந்தா அணிதானே. இல்லாவிட்டால் தாங்கள் ஏதாவது அணிதொடங்கும் திட்டமா?

    //மீண்டும் அம்மக்களை படுபாதாளத்தில் தள்ளிவிட சில தீய சக்திகள் வேஷம் போட்டுக் கொண்டு மக்கள் முன்வர எத்தணிக்கின்ற//
    இது யாரை குறிக்கிறது என சொல்லலாமே; ஏன் இவர்கள் அந்த ஓர் அணியில் வேண்டாமா? அப்ப இவர்கள்தான் எதிர்அணியா?

    கொழும்பில் உள்ள தலமை (தமிழ் என சொல்லும்) அனைத்தும் ஓரணி சேர ஒரு ஓரணி மகாநாடு நடத்துங்கோ; அது சாத்தியபட்டால் தோழில் கை போட்டு படம் எடுக்க வேண்டாம் ஒரே கருத்துடன் உங்கள் செயல் திட்டங்களை சொல்லுங்கோ; அதை விட்டு பல்லியை விட கோமாழிதனமாய் பேசுவது ஒரு அமைச்சருக்கு பண்பா?அல்லது தமிழருக்குதான் விடிவா??

    Reply
  • chandran,raja
    chandran,raja

    பல்லி ……….. புலிகள் தமிழ்மக்களுக்கும் இலங்கை அரசுக்கும் செய்த கொடுமைகளைவிட பலமடங்கு ஜாஸ்தியானது உங்கள் கருத்து. கருத்து சொல்வது அனுமதிக்க வேண்டியது தான். உங்கள் கருத்து ……………………. இருப்பும் உங்கள் சொகுப்பும் இப்படியெல்லாம் பேச எழுத வைக்கிறது.
    நாம் என்ன செய்ய முடியும்? சொல்லிச்சொல்லி அப்படியே…….. போயிடுங்க.. செய்வீங்களா? தமிழ்மக்கள் கஞ்சிகுடிக்க வழிதேடியதாகும்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    //rohan on July 15, 2009 6:18 am நாம் அப்படி எதை இழந்தோம், தோழர்?//
    தவறு, இழக்க என்ன இருக்கு என்று கேட்காமல் விட்டது தவறு.

    Reply
  • palli
    palli

    சந்திரா உங்கள் புலி காச்சலை விட எனது கருத்தக்கள் ஒன்றும் மோசமாக இல்லை; நான் என்ன சொன்னேன் ஓரணிய்யாய் திரள முதல் தலைமைகள் ஒன்றாய் திரளுங்கள் என்றுதானே சொன்னேன்; …… புலியை மட்டும் விமர்சித்தால் அது விசமம்; அனைவரையும் எழுதுவதால் இதுவே விமர்சனம்; உங்களுடைய எழுத்து புலிக்கு எதிரானது; எனது எழுத்து தமிழருக்கு ஆதரவானது;ஆக கோழியா முட்டையா முதல் வந்தது என்பதை ஆராய்வதை விட்டு ஏதாவது கிறுக்க பாருங்கோ நானும் அப்படியேதான்;

    Reply
  • msri
    msri

    நீங்களே> உங்கள் சுயங்கள் எல்லாவற்றையும் மகிந்தாவிடம் கொடுத்துவிட்டு> மீளப் பெறமுடியாமல் தவிக்கும்போது!>தமிழ்மக்கள் இழந்தவற்றை மீளப் பெறப்போகின்றீர்களோ?

    Reply
  • Thaksan
    Thaksan

    ஒரு அணி எண்டது ஏகபிரதிநித்துவமா? இதைத்தானே அவையளும் சொன்னவை. சரியான வழியில் எண்டு கொஞ்சம் மாத்தி சொல்லியிருக்க வேணும். ஜனநாயகம் எண்டால் பல அணியள் இருக்கிறது ஒண்டும் பிரச்சனையான விசயமில்லைதானே? சனம் தங்களுக்கு விரும்பினவையளை தெரிவு செய்யட்டன்.

    Reply
  • ruban
    ruban

    யுத்தத்தின்போது இழந்துள்ள அனைத்து வளங்களையும் மீளப் பெறுவதற்கு அனைத்து மக்களும் காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும்
    -தேவானந்தா

    Reply
  • romeo
    romeo

    எதைச்செய்வதென்றாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் என்பதை எல்லோரும் ஏன் மறந்து விட்டீர்கள். சிலவேளை மகிந்தவின் கட்சியின் சின்னத்தில் தமிழ்கட்சிகளும் தேர்தலில் நின்று வெற்றிபெற்று அக்கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால் தமிழரின் உரிமைகளைப் பெறுவதற்கு ஒரு திடமான அரசியல் சந்தர்ப்பம் கிடைக்க வழிபிறக்கலாமல்லவா? சற்று பொறுத்திருந்துதான் பார்ப்போமே

    Reply
  • Appu hammy
    Appu hammy

    When everybody in opposition they can bring lot of beautiful prpposals. They don’t think about the practical situaton. I think first what he do is bring some proposals to reorganise the party rather than trying to attend much complicated issue like ethnic problem.

    Reply
  • Appu hammy
    Appu hammy

    There is a paradigm shift in people’s attitude to the ethnic conflict, the govt. should think about expediting the process of empowering local governance and resettling the displaced simultaneously without succumbing to the pressures of lobbies crying that there is no need for a political solution because we defeated LTTE militarily. It would be reneging the stated stand before getting all groups and parties co-operation to rout terrorism, domestic and foreign, now rejecting it would amount to loss of credibility.

    Reply