இலங்கை சென்று திரும்பிய குழுவின் மாநாடு ஜேர்மனியில்.

அண்மையில் நடந்தேறிய அனர்த்தங்களால் இடம்பெயர்ந்து தற்போது வன்னியில் தடுப்பு முகாம்களில் வசித்துவரும் தமிழ் மக்களின் வாழ்வியலை மேம்படுத்தும் முகமாக ஜரோப்பிய முழுமையான அமைப்பொன்றை நிறுவுவதற்காக July 17ம் திகதி தொடக்கம் 19ம் திகதி வரை Germany – Stuttgart இல் கூட்டத் தொடர் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்திற்கு ஜேர்மனி, டென்மார்க், சுவிற்சலாந்து, பிரான்ஸ், ஜக்கிய இராச்சியம், நோர்வே போன்ற நாடுகளில் இருந்து எழுபதிற்கும் அதிகமான பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும் ஊடகவியலாளர்களும் கலந்து கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மகாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் கடந்த பங்குனி மாதம் ஸ்ரீலங்கா விஜயம் செய்து பசில் ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டாக்கடர் பாலித கோகன்ன ஆகியோருடன் 3 நாட்கள் மாநாட்டில் கலந்து கொண்டதுடன், செட்டிக்குளம் தடுப்பு முகாம்களுக்கும் விஜயம் செய்தது குறிப்பிடத்தக்கது. இவ் விஜயத்தில் ஜக்கிய இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மனி, சவுதி அரேபியா, சுவிற்சலாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளில் இருந்து 21 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் இலங்கை அரசின் அதிகாரிகளை தனிப்பட்டரீதியில் சந்தித்து பேசுவதை தவிர்த்து, ஒரு சர்வதேச அமைப்பாக இயங்குவதே இக்குழுவின் முக்கிய நோக்கம்.

மார்ச் மாதத்தில் கொழும்பில் இடம்பெற்ற மாநாட்டை தொடர்ந்து தற்போது அவுஸ்திரேலியாவில் இக்குழு இயங்கத் தொடங்கியுள்ளது. ஜரோப்பாவில் அமையவிருக்கும் இக்குழு அவுஸ்திரேலியா மற்றும் ஏனைய நாடுகளில் அமையவிருக்கும் குழுவுடன் இணைவாக பணிபுரியும் எனத் தெரியவருகின்றது.

வன்னி முகாம்களின் நிலை தொடர்ந்தும் மோசமானதாக உள்ள நிலையில் ஏற்பாட்டாளர்கள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • sri
    sri

    /இக்கூட்டத்திற்கு ஜேர்மனி, டென்மார்க், சுவிற்சலாந்து, பிரான்ஸ், ஜக்கிய இராச்சியம், நோர்வே போன்ற நாடுகளில் இருந்து எழுபதிற்கும் அதிகமான பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும் ஊடகவியலாளர்களும் கலந்து கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.//

    சமூக ஆர்வலர்களும் !!!???

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //”வன்னி முகாம்களின் நிலை தொடர்ந்தும் மோசமானதாக உள்ள நிலையில் ஏற்பாட்டாளர்கள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றனர்”.//

    விபரத்தை அறிவித்த கொன்ஸ்ரன்ரைன் அவர்களுக்கு நன்றி. ஆனால் தங்களால் எழுதபபட்ட மேலே நான் இணைத்துள்ள வரிகளின் அர்த்தத்தை தயவுசெய்து முழுமையாக தெளிவுபடுத்துங்கள். ஏனெனில் அதன் விளக்கத்தை முழுவதுமாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    Reply
  • karuna
    karuna

    AGENDA

    Sri Lankan Diaspora Meeting

    Stuttgart/Germany

    17th, 18th & 19th July 2009

    City Community Centre

    Kneippweg 8

    70374 Stuttgart

    Germany

    Friday, 17TH July 2009

    Till 18:00 Arrival and Registration

    20:00 – 21:00 Dinner

    21:00 – Get-to-gether

    Saturday, 18TH July 2009

    08:30 Breakfast

    09:00 – 09:15 Welcome

    Yoganathan Putra (DE)

    09:15 – 09:25 Introduction

    Mathi Kumarthurai (DK)

    09:25 – 10:45 Sri Lankan Diaspora

    Purpose: Mission & Vision

    Diaspora & The Common understanding

    Ideas about the future activities of the Sri Lankan

    Discussion and final summary of the topics

    Jeganathan (DE) &

    Mathi (DK)

    10:45 – 11:15 Tea/Coffee break

    11:15 – 12:15 The current situation of IDPs in Sri Lanka,

    their future and the role of Diasporas

    Discussion and final summary of the topics

    Dr. Bala (UK)

    12:15 – 13:15 Lunch

    13:15 – 14:15 Humanitarian Aid

    – Little Aid & the future

    – Sri Lankan Democratic Forum

    Discussion and final summary of the topics

    Tarrin Constantine

    (UK)& SLDF (DE)

    14:15 – 15:15 The way forward for the Minorities in Sri

    Lanka

    Discussion and final summary of the topic

    Rauf Cassim

    (NO)

    15:15 – 16:00 Tea Break

    16:00 – 18:30 Forming and planning a International Sri

    Lankan Diaspora Organisation

    – Constitution (Selvakumar Thuraisingam)

    Discussion and final summary of the topic

    Selvakumar T.

    Vathanan Kumarathurai

    Mathi Kumarathurai

    (DK)

    18:30 – 20:00 Dinner

    20:00 – 21:00 Forming and planning a International Sri

    Lankan Diaspora Organisation

    Discussion and final summary of the topic

    Vathanan Kumarathurai

    Mathi Kumarathurai

    (DK)

    Sunday, 19TH July 2009

    08:30 Breakfast

    09:15 – 10:15 The long-term future of the youths in the

    Rehabilitation camps

    Discussion and final summary of the topics

    Soori (UK)

    10:15 – 10:45 Tea/Coffee break

    10:45 – 11:45 Presentation from Dalit Movement

    Discussion and final summary of the topics ( … )

    11:45 – 12:15 Speech by Honourable Ambassador of Sri

    Lanka Mr. T. B. Maduwegedera

    12:15 – 13:30 Lunch

    13:30 – 14:00 Vote of thanks and conclusion of the

    workshop

    Final remarks

    Yoganthan Putra (DE)

    Reply
  • தமிழ் தலிபான்கள்
    தமிழ் தலிபான்கள்

    இது என்னப்பா டென்மாக்கில் இருந்து குமாரதுரை குடும்பம் முழுக்கதானே போனது அப்ப இதை எங்கை சொல்ல.

    Reply
  • mutthan
    mutthan

    பங்குனி மாதத்தில் இவர்கள் அரசாங்க விருந்தினராக வரவளைகப்படபோது அதனது ஒரே நோக்கம் புலிக்கு எத்ரான ஒரு அமைப்பை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உருவாகுவதை கொண்டிருந்தது. புலிகளின் தோல்வி அல்லது முழு அழிவு புலி எதிர்ப்புவாதிகள மட்டுமல்ல அரசாங்கமும் எதிர்பாராத நிலைமைகளில் அரசாங்கம் இந்த முயற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தது.

    புலிகளின் அழிவு புலி எதிர்ப்பு வாதத்தின் அழிவு. புலிகளில் இருந்து புலி எதிர்ப்பை பிரிக்க முடியாது. கடந்த இருபது வருட புலி எதிர்ப்பு வாதத்தின் அரசியல் முடிவு அரசாங்கத்துடன் ஏதோ வழியில் இணைந்து செயல்படுவது என்பதுடன் மட்டுப்படுத்த பட்டுள்ளது. இது இவர்களது ஜனநாயக உரிமை.

    புலிகளுக்கு தமிழ் மக்கள் அதரவு கொடுத்தது புலிகளின் ஜனநாயக விரோத அரசியலை விளங்கிக் கொள்ளாததால் இல்லை, புலிகளின் ஆய்த போர்டட்த்தினால் தமிழ்ஈழம் கிடைக்கும் என்றதை நம்பினதால் ஆகும்.

    தமிழ் மக்கள் அரசாங்கத்துடன் இன்னைந்து உரிமைகளை பெறுவது என்ற அரசியலை ஏற்றுகொள்ள மாட்டர்கள் என்றதை கடந்த காலங்களில் புலி எதிர்ப்பு இணையத்தளங்களின் தொடர்சியான வேலைகளின் மத்தியிலும் பரந்துபட்ட அதரவை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

    புலிகளின் இன்றைய நிலைப்பாடு புலி எதிர்ப்பு அரசியலில் இருந்து பெரியளவில் வேறுபடவில்லை ஆனால் அதை கேட்பதற்கு ஒருவரும் தயாரில்லை. இந்தியா, சர்வதேசம், ஜனநாயகம், பேச்சுவார்த்தை என்ற மரண ஓலத்தை தறபோது கேட்க வேண்டிய தேவையும் ஒரு அரசாங்கத்திற்கும் இல்லை.

    பங்குனி மாதத்தின் அரச விருந்தாளிகள் புலி எதிர்ப்பு தனி நபர்களும் புலி தவிர்ந்த இயக்க பிரதிநிதிகளும் மட்டும் தான் அரசாங்கத்தின் பிரதிநிதிகளை தனிய தனிய சந்திக்காமல் ஒரு அமைப்பு மூலம் சந்திக்க உருவாக்கப்படும் கூட்டம் சங்கரி, சித்தார்த்தன், ஸ்ரீ பிரிவினரை டக்லஸ், கருணா மற்றும் ஏனைய தனினபர்களுடன் ஒன்று சேர்பதற்கு முயற்சி செய்யலாம். இது அரசாங்கத்தின் புலம் பெயர்ந்த தமிழர்களின் சர்வதேச செயலகம்.

    தமிழ்மக்களின் உடனடித் தேவை இதனை நிராகரிப்பதாகும். புலிக்கும், புலிஎதிர்ப்புக்கும் வெளியால் வருவது தான் முதலாவது தேவை .

    Reply
  • rohan
    rohan

    ஏற்பாட்ட்டாளர்கள் தங்கள் பெயர்களைச் சொல்லத் தயங்கும் அளவுக்கு அவர்களால் தைரியமாக இந்தக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்று தெரிகிறது.

    Reply