இன முரண்பாட்டுக்கு அடிப்படையான மொழிப் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை – அமைச்சர் டியூ குணசேகர

duegunasekara.jpgஇன முரண்பாட்டுக்கு அடிப் படையான மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது, என அரசியலமைப்பு தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டியூகுணசேகர பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

இதனடிப்படையில் சகல அரச நிறுவனப் பிரிவுகளிலும் மொழி செயற்படுத்தல் அதிகாரி களை நியமிக்கத் தீர்மானித்துள்ளதுடன் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை ஓரிரு தினங்களில் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று அவசரகால சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்த தாவது;

33 வருட பயங்கரவாதம் 27 வருட யுத்தம் இவை முழு மையான முடிவுக்கு வரும்வரை அவசரகால சட்டத்திற் கான தேவை இருக்கும். நாம் என்றும் யுத்தத்தை விரும்புபவர்களல்ல. யுத்தத் தைத் தவிர்க்கக்கூடியவற்றை நாம் பலமுறை மேற் கொண்டுள்ளோம்.

யுத்தம் முடிவுக்கு வரவேண்டும், தீர்வொன்று காணப்பட வேண்டுமென்பதற்கு அன்றே 13வது திருத்தச் சட்டத் திற்குச் சபையில் ஆதரவு வழங்கியவன் நான். 13வது திருத்தத்தில் மொழிப் பிரச்சினையும் அடங்குகிறது. இதற்கான அடிப்படைகளை நாம் இனங்கண்டுள்ளதுடன், அதற் குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரச நிறுவனங்களின் சகல பிரிவுகளிலும் மொழி செயலாற்றலை நடைமுறைப்படுத்தும் வகையில் அதிகாரி களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்றை இரண்டொரு தினங்களில் சமர்ப்பிக்கவுள்ளேன். இதன்படி தமிழில் அனுப்பப்படும் கடிதமொன்றுக்கு இனி சிங்களத்தில் பதில் அனுப்புவது நடைபெறாது. அவ்வாறு செயற்படும் அதிகாரிகளை இனங்கண்டு உரிய நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டேன்.

பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் பாராளுமன்றத்தில் உள்ள பத்துக்குமேற்பட்ட கட்சிகளும் ஒருமைப்பாட்டுடன் செயற்படவேண்டும். ஜே. வி.பி. யே இன்று சிங்கள இன வாதத்திற்கு இடமளிக்கக்கூடாதென சபையில் கூறுகிறது. இதனை நாம் வரவேற்கிறோம். பாராட்டுகிறோம். யுத்தம் வட, கிழக்கை மட்டுமல்ல இதர சகல பிரதேசங்களையும் பாதித்துள்ளது. சகல மக்களையும் பாதித்துள்ளது என்பதை சகலரும் உணரவேண்டும்.

எமது தொடர்புகளெல்லாம் ஏகாதிபத்திய நாடுகளுடன் மட்டும்தான் என ஐ. தே. க எம்.பி. ஜோசப் மைக்கல் பெரேரா சபையில் கூறினார். இதை நான் மறுக்கிறேன். இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை ஆரோக்கியமானதாகவே உள்ளது.

நாம் சகல நாடுகளுடனும் ஒப்புரவுடன் செயற்பட்டு வருகிறோம். எனினும் எமது நாட்டுக்குப் பாதிப்பு ஏற்படும் விடயங்களில் நாம் கவனமாகச் செயற்படுவது அவசியம். இதனால் தான் அரசாங்கம் நாட்டுக்குச் சாதகமான தீர்மானத்தை இது விடயத்தில் மேற்கொண்டது. இந்தியா போன்ற அயல்நாடுகளை எமக்கு ஆதரவாக திருப்புவ தற்கும் இத்தகைய தீர்மானங்களே முக்கியமானதாக அமைந்தன எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *