இலங் கையில் பாம்புக் கடியினால் மக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, கடந்த ஆண்டில் மட்டும் நாடாள?விய ரீதியில் 33 ஆயிரம் பேர் பாம்புக்கடிக்குள்ளாகியதாக அடிப்படைப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அதிகளவில் பின் தங்கிய கிராமவாசிகளே பாம்புக்கடியினால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் இது தொடர்பாக கவனம் செலுத்தாவிடின் மோசமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்படுகின்றது.
மேலும், பாம்பு கடித்தவர்கள் நவீன சிகிச்சை வசதிகளை உடைய வைத்தியசாலைகளை அணுகாது அபாயகரமான பாரம்பரிய சிகிச்சைகளையே மேற்கொண்டுள்ளதாக களனிப் பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட வருடாந்த கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், பாம்புக் கடியால் உயிரிழந்தவர்களில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படாதோர் தொகை குறிப்பாக கிராமிய மட்டத்தில் பதிவு செய்யப்படவில்லை. மின்சார வசதியற்ற கிராம மக்களே அதிகளவில் அரையிருள் வேளைகளில் பாம்புக்கடிக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.