நாட்டில் சகல இன மத மக்களுக்குமான உரிமைகள் வழங்கப்பட்டாலே பயங்கரவாதத்தை ஒழித்து தேசியக் கொடியை நாம் உயர்த்துவது அர்த்தமுள்ளதாகும். அதற்கான முதற்படியை அரசு உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் ஆயிரக்கணக்கான விதவைகள், பெற்றோரை இழந்த சிறுவர்கள், பிள்ளை களை இழந்த பெற்றோர்கள் உள்ளனர். அவர்களுக்கான எதிர்கால வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். அத்துடன் நாட்டின் பிரதான பிரச்சினையை இனங்கண்டு அதனைத் தீர்க்க அரசு உரிய கவனம் செலுத்தவேண்டும்.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டமைக்கு மக்கள் விடுதலை முன்னணி வழங்கிய ஆதரவினைப் போலவே மிஞ்சியுள்ள பயங்கரவாத நடவடிக்கைகளைத் துடைத்தெறியும் வரை அவசரகால சட்டத்துக்கும் பூரண ஆதரவினை வழங்கும். அதற்குப் பின்னரும் அவசரகாலச் சட்டம் தொடருவதை ஜே. வி.பி. அனுமதிக்காது. ஏனெனில் அது மக்களைப் பாதிப்பதாகவே அமையும். அவசர காலச்சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே விஜித ஹேரத்: (ஜே. வி. பி. எம்.பி) மேற்கண்டவாறு கூறினார்.
மாயா
நல்லதொரு மாற்றம். கெல உருமய விரைவில் அறிக்கை விடும் அல்லது அழிந்து போகும்.