யாழ்ப் பாணம் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நாடகத் தயாரிப்பாளர்கள் , அண்ணாவிமார்கள் மற்றும் பல்துறை சார்ந்த கலைஞர்கள் அனைவரும் யாழ்.பிரதேச செயலகத்தால் நடத்தப்படவிருக்கும் கலாசார விழாவில் கௌரவிக்கப்படவுள்ளனர்.
இதனால், இந்தப் பிரதேச செயலர் பிரிவிற்குள் இருக்கின்ற மேற்படி கலைஞர்கள் தங்கள் விபரங்கள் அடங்கிய விண்ணப்பப்படிவத்தை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தருக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மூத்த கலைஞர்கள் எவராவது இதுபற்றி அறியாதிருப்பார்களாயின் அவர்கள் தொடர்பான விபரங்களை அறிந்தோர் அந்த விபரங்களைக் கலாசாரப் பேரவைக்கு அனுப்பிவைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.