இலங்கை யிலிருக்கும் அனைத்துக் கட்சிகளின் இணக்கப்பாட்டுடனேயே அதிகாரப் பகிர்வுத்திட்டம் அமுல்படுத்தப்படுமென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார். அதிகாரப்பகிர்வானது, இலங்கையிலிருக்கும் இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
13 ஆவது திருத்தம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதல்லவெனக் கூறிய அவர், இலங்கை மக்களுக்கு ஏற்ற வகையிலேயே இந்த அதிகாரப் பகிர்வுத்திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்