இடம்பெயர் மக்களுக்கு ‘நீர்’ வசதி – மேலுமொரு நீர் வழங்கும் திட்டம் விரைவில் ஆரம்பம்

tap_water.jpgவவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்போருக்கு போதுமானளவு நீர்ப்பாசன வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக மேலும் ஒரு நீர் வழங்கும் செயற்திட்டமொன்றை ஆரம்பித்து வைக்கவிருப்பதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

மல்வத்தை ஓயாவிலிருந்து நாளொன்றுக்கு 5 மில்லியன் லீற்றர் நீரை பெற்றுக் கொள்ளும் வகையிலான இந்த செயற்திட்டத்தை எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் ஆரம்பித்து வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

வலயம் 4 மற்றும் வலயம் 5 லுள்ள நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்போரின் உபயோகத்துக்கு போதுமான அளவு நீர் கிடைப்பதில்லையென்ற பெரும் குற்றச்சாட்டு நிலவி வருகின்றது.

இதனை நிவர்த்தி செய்யும் முகமாகவே மேற்படி இரு வலயங்களிலும் தங்கியிருப்போருக்காக மல்வத்து ஓயாவிலிருந்து நாளொன்றுக்கு 5 மில்லியன் லீற்றர் நீர் பெற்றுக் கொடுக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் குறிப்பிட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மல்வத்து ஓயாவிலிருந்து நாளொன்றுக்கு 5 மில்லியன் லீற்றர் நீரைப் பெற்றுக் கொள்ளும் முதலாவது செயற் திட்டம் அமைச்சர் ரிசாட் பதியுதீனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *