வன்னியின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக அறியும் பொருட்டு இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா வன்னிக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இவ்விஜயத்தின் போது வன்னிப் பிராந்தியத்திற்கான சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடனான சந்திப்பொன்றையும் இராணுவத் தளபதி மேற்கொண்டுள்ளார்.
இச்சந்திப்பின் போது வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் நலன்புரி விடயங்கள் தொடர்பாகவும் அவர்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், வடபகுதியில் இடம்பெறும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இராணுவத்தினரின் பங்கு தொடர்பாகவும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
வன்னியின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக பூரண விபரங்கள் இராணுவத் தளபதிக்கு வன்னிப் பிராந்திய உயரதிகாரிகளால் எடுத்துரைக்கப்பட்டது. வன்னிப் பிராந்திய கட்டளைத் தளபதிகள், பிரிகேடியர்கள் மற்றும் அதிரடிப் படையின் உயரதிகாரிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.