“கள நிலையைப் புரியாத நிலையிலேயே புலம்பெயர் நாடுகளில் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர். சில சக்திகள் அவர்களைத் தூண்டி விட்டன என தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து அளித்த பதிலில் அவர் மேலும் கூறியதாவது
காரணம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவரது தளபதிகளும் முற்றுகைக்குள்ளான விடயம் சகலரும் அறிந்ததே. அவர்களைக் காப்பாற்றுவதற்காகத் தான் இப்படியான ஆர்ப்பாட்டங்களில் அவர்கள் ஈடுபட்டனர். சர்வதேச சக்திகளும் இதற்குத் துணை போயின. அது வெற்றியளிக்கவில்லை .எமது அரசாங்கமும் அதற்கு இடமளிக்கவில்லை.
வன்னிப் பிரதேசம் தற்போது முற்று முழுதாக அழிந்து போயுள்ளது. அந்தப் பிரதேசங்களைக் கட்டியெழுப்புவதற்கு புலம் பெயர் நாடுகளில் வாழும் மக்கள் தங்கள் அறிவையும் வளங்களையும் வன்னி மக்களுக்கு வழங்க முன் வரவேண்டும்” எனக் குறிப்பிட்டார்
மாயா
எங்கட ஆக்கள் அழிக்கிறதுக்கு மட்டுமே முன் வருவார்கள். ஆக்கத்துக்கு வேறு ஆட்களைத்தான் பார்க்க வேணும். இந்த அழிப்பு மன நோயிலிருந்து மீள வெகு காலம் எடுக்கும்.
thurai
முதலில் தமிழர்களின் காவலர்களாக ஈழத்தில் வாழும் அரசியல்வாதிகள், தமக்கிடையேயும் தமிழர்களிற்கிடையேயும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக் வழ்ந்து காட்டவேண்டும்.
துரை
பார்த்திபன்
//புலம் பெயர் நாடுகளில் வாழும் மக்கள் தங்கள் அறிவையும் வளங்களையும் வன்னி மக்களுக்கு வழங்க முன் வரவேண்டும்//
வளங்களை வழங்கச் சொல்வது சரி. ஆனால் “புலன்” பெயர்ந்தவர்களின் அறிவையும் வழங்கினால், நாளை வன்னிமக்களும் தெருவிலை நிற்க வேண்டிய நிலை தான் வரும்.
நண்பன்
ஒரு சில இணைய தளங்களில் புலி வாலுகள் படுத்தின பாடு. ஐயோ, அவர்களுக்கு இருந்த அறிவை வச்சு கட்டிய கனவு மாளிகைகள். அதை எதிர்த்து கருத்து சொன்னவர்களை வாட்டிய விதங்கள். பிளாஸ் பேக் காட்சி , எவ்வளவு எரிச்சலை தாங்கியிருக்கிறோம். அறிஞர் அண்ணா சொன்ன எதையும் தாங்கும் இதயங்கள் மாற்று கருத்தாளர்கள்.
இப்ப என்ன விசேஷம் தெரியுமா? நோர்வேயின் ஒஸ்லோவில் நடைபெறும் இலக்கிய சந்திப்புக்கு புலிகளும் வந்தாங்களாம்? துரோகிகளோடு புலிகள் குசலம் விசாரிப்பதை அஸ்தமனத்தின் மாற்றம் என்று சிலர் எடுத்துள்ளனர். இல்லை, இதுதான் மாற்று கருத்தாளர்களின் அஸ்தமனத்தின் ஆரம்பம்.
எனக்குத் தெரிய பல விடயங்கள் நடந்தன. யாராவது செய்யும் நல்லா நடக்கும் ஒரு காரியத்தை கண்டால் புலிகளுக்கு தாங்காது. ஒன்று அது அவர்களுடையதாகும். இல்லையென்றால், அது அழிந்து நாசமாகப் போகும். அது கோயில் என்றால் என்ன? கழுவுற குளக்கட்டு என்றால் என்ன? அதைப் பற்றி புலிகளுக்கு கவலையில்லை.
நசுங்கிக் கொண்டு வருவார்கள். நத்தை போல் ஒட்டி உறிவார்கள். எதுவும் நடக்காது போனால் நாத்திவிட்டே போவார்கள்.
பார்த்திபன், வன்னி மக்கள் தெருவுக்கும் வர முடியாமல் நிற்கிறார்கள். இனி இவர்களது அறிவை வழங்கினால் அந்த அப்பாவி மக்கள் மரங்களுக்கு பசளையாக ஆனாலும் ஆகுவார்கள். அதிலும் இந்த பெரிசுகள் இருக்குதுகளே, அதுகளுக்கு ஒரு மண்ணும் தெரியாது. இன்னமும் வட்டுக்கோட்டையை பிடிச்சுக் கொண்டு வாந்தி எடுக்கிறார்கள்.
msri
கருணா தன்ரை புத்தியை முந்திப் பிரபாகரனிடம்> இப்போ “மகிந்தப் பிரபாகரனிடம்” கொடுத்துவிட்டு> இப்போ வன்னி மக்களுக்கு அறிவுச் “சப்ளை” கேட்கிறார்!
Kusumbo
நண்பனே உம்மிடம் ஒரு கேள்வி? யார் அந்த மாற்றுக்கருத்தாளார்கள்? இவர்கள் மாற்றுக்கருத்தாளர்கள் என்றால் புலிகள் கருத்தாளர்களா? புலிகளுக்கென்று என்ன கருந்து இருந்தது? புலத்துத்தமிழர்களின் கழுவி உழைத்த காசை எப்படிப் புடுங்குவது என்பதா? இதைத்தானே புலிகள் காலங்காலமாகச் செய்தார்கள். இப்ப கேபியும் மற்றவர்களும் தொடர்கிறார்கள். அண்ணாந்து பார்க்கும் தமிழன் இருக்கும் வரையும் புலிகள் காட்டில் மழைதான்……………
நண்பன்
Kusumbo , மக்களின் மேல் உண்மை அன்பு கொண்டு உண்மை பேசிய அனைவரும் புலிகளால் துரோகிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் மாற்றுக் கருத்தாளர்கள்தான். புலிகள் யாரையெல்லாம் துரோகிகள் என்றார்களோ , அவர்கள்தான் உண்மையில் நல்லவர்கள். உண்மைக் கருத்துகளை ஜீரணிக்கவோ அல்லது அந்தக் கேள்விகளுக்கு முகம் கொடுக்க முடியாமலோ துரோகிகள் என்ற போர்வையில் நல்லவர்களும் , தேச நலன் கொண்டோரும் புலிகளால் ஒதுக்கப்பட்டனர். மக்களின் மேல் மேல் நேசம் கொண்டு செயலாற்றிய தமிழன் – இஸ்லாமியன் – சிங்களவன் அனைவரும் மாற்றுக் கருத்தாளர்களே.
தன் சுயநலத்துக்காக அல்லது தன் இருப்புக்காக புலிகள் அளவுக்கு தீங்கிழைத்தவர்கள் என்றால் கூட்டணியினரும் அவர்களது ஆரம்ப கால தலைவர்களுமேயாகும். தீர்க்கதரிசனமற்ற இவர்களது செயல்பாடுகளே இன்றைய படு அவலத்துக்கு காரணம்.
புலிகளிடம் இருந்த கருத்துகள் என்றால், மண் மீட்பது , தன் இருப்பைக் காப்பாற்றுவது,கொலை செய்வது , காசு புடுங்குவது என்பவை தவிர வேறு ஏதாவது புலிகளிடம் கருத்துகள் இருந்தனவா?
தன் மக்கள் பிணங்களின் மீது கல்லறைகளை கட்டினார்களே தவிர , தன் மக்களின் நலனுக்காக ஒரு கழிப்பறை கூட கட்டவில்லை. அவர்கள் விதைத்தார்கள் முளைக்கும் என்று, இறுதியில் அவர்களும் விதைகளுக்கு உரமாகிப் போனார்கள் பாலைவனம் போன்ற கடற்கரையில்….மனிதன் சாவதற்கு போராடவில்லை. வாழ்வதற்கே போராடுகிறான்.
தன் பிறந்த தினத்தை மாவீரர் நாளாக கொண்டாடியவர்கள் , அந்த எண்ணத்தை ஈடேற்றிக் கொண்டார்கள். ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான். எனவே புலத்தில் தான் வாழும் தேசத்து மக்களது இதிகாசங்களையாவது கேட்டு அறிந்து கொண்டால் போதும். இவர்களது இன்றைய முன்னேற்ற வாழ்வுக்கு என்ன காரணம் என புரிந்து கொள்ளலாம். அவர்களது முன்னேற்றத்தில் நாம் குளிர் காய்ந்து வாழ்கிறோம். அது சரியாகப் படுகிறது. ஆனால் நம் தேசத்தில் உள்ளவன் நம் நாட்டில் பரந்து வாழ்வது தவறாக இன்னும் படுகிறது. இவை அனைத்தும் ஆதிகாலத்திலிருந்தே இனவாத தமிழ் தலைவர்களது தவறான கருத்தியல் உட்புகுத்தல்கள். தனித்து வாழ வேண்டும் எனும் சுயநலப் போக்கு இணைந்து வாழ்தலுக்கு எதிரானது. மிருகங்கள் கூட இணைந்து வாழும் உலகில் மனிதன் இணைந்து வாழ இணங்காவிடில் அவன் மிருகத்தை விட கேவலமே.
அண்ணாந்து பார்க்கும் தமிழன் இருக்கும் வரையும் புலிகள் காட்டில் மழைதான்…………… அதுவே புயலோடு மழையாக மாறிடும். மலைக்குள் தீப்பிளம்புகள் கசிகின்றன. அவை ஒருநாள் வெடித்துச் சிதறும் போது இவர்களுக்கு ஓடி ஒழிப்பதற்கு தேசங்களே இருக்காது.
Kusumbo
//ஆனால் நம் தேசத்தில் உள்ளவன் நம் நாட்டில் பரந்து வாழ்வது தவறாக இன்னும் படுகிறது. இவை அனைத்தும் ஆதிகாலத்திலிருந்தே இனவாத தமிழ் தலைவர்களது தவறான கருத்தியல் உட்புகுத்தல்கள். தனித்து வாழ வேண்டும் எனும் சுயநலப் போக்கு இணைந்து வாழ்தலுக்கு எதிரானது. மிருகங்கள் கூட இணைந்து வாழும் உலகில் மனிதன் இணைந்து வாழ இணங்காவிடில் அவன் மிருகத்தை விட கேவலமே./
நண்பா! இது உண்மையாக வசனமாக இருந்தாலும் உருசமாச்சாரத்தையும் சொல்ல விரும்புகிறேன். கூத்தணிக்கு முந்திய தலைவார்கள் ஒற்றுமையை விரும்பியே கேம்பிரிச் நண்பர்களுடன் சேர்ந்து ஒற்றையாட்சிக்கு இணைந்தார்கள். இனத்துவேசத்துக்கு அடிகோலியது ஆரம்பத்தில் சிங்களஆளும் வர்க்கம் என்பதை யாரும் மறுக்க இயலாது. சிங்களவ ஏகாதிபத்தயம் விரும்புவது தமக்கு அடங்கிவாழும் பெளத்த சிங்கள அரசை மட்டும் என்பதை யாரால் மறுக்க முடியும். உயர்படிப்புக்களை மேற்கொண்ட கேம்பிரிச் சிங்கள அரசியல் வாதிகள் பரந்து நோக்குடன் செய்பட்டிருந்தால் கூத்தணியோ; கூத்தாடிப் புலியணியோ வந்திருக்க இயலாது.
நண்பன்
// உயர்படிப்புக்களை மேற்கொண்ட கேம்பிரிச் சிங்கள அரசியல் வாதிகள் பரந்து நோக்குடன் செய்பட்டிருந்தால் கூத்தணியோ; கூத்தாடிப் புலியணியோ வந்திருக்க இயலாது.- Kusumbo//
Kusumbo , முதல் இனவாதக் கட்சி தமிழரால் உருவானது. சிங்களவனால் அல்ல. மலையக தமிழனது வாக்குரிமையும் பிரஜாவுரிமையும் இல்லாமல் செய்தவன் தமிழனேயின்றி சிங்களவனல்ல.
அன்றைய காட்சிகளை விட இன்றைய காட்சிகளுக்காக சற்று சிந்திப்போம். எவ்வளவோ தனிமைப்படுத்தல்களுக்கும் ஒதுக்குதல்களுக்கும் ஆளாகிய மலையக மற்றும் இஸ்லாமிய சமூகம் அரசோடு இணைந்து அண்மைக் காலத்தில் தமிழனை விட அதிகம் உயர்ந்துள்ளது. அதுவும் நம் தேசத்தில்?
அடிப்பேன் உதைப்பேன் ராஜபக்ஸுவுக்கு 8ம் பொருத்தம். அணைத்துக் கொண்டு சென்றால் பலமுள்ள போது ராஜபக்ஸவிடம் இருந்து ஓரளவாவது நியாய தீர்வொன்று கிடைக்கும். இனியும் மோதினால் எல்லா தமிழரும் வெளிநாட்டில் அகதியாகவோ அல்லது உள்நாட்டில் அடிமையாகவோதான் வாழ நேரும்.
மகிந்த அளவு பலமான ஒரு தலைவன் சிங்கள தேசத்தில் இதுவரை இருந்ததில்லை. சிங்களவர்கள் மகிந்தவை தமது மன்னன் என்றே அழைக்கிறார்கள். அதாவது மன்னர்கள் அடுத்தவர்கள் சொல் கேட்பதில்லை. தான் விரும்பியதை தனியாக முடிவெடுத்து நிறைவேற்றுபவர்கள். சிகள உருமய மற்றும் ஜேவீபி தமிழருக்கு எதிராக பேசும் கட்சிகள் என அவர்களை ஒதுக்க மகிந்த எடுத்த முடிவிலிருந்து , அவர் தமிழருக்கு நல்லது செய்ய நினைக்கிறார் என்பதன் அறிகுறியாக கருதலாம். இன்னம் சொல்லலாம் அது மகிந்த புராணமாகிவிடும்.
இறந்த தன் தலைவனை இருக்கிறான் என் சொல்லும் புலிகள் , இராணுவத்தினரிடம் சரணைடையாதே கிட்ணியை எடுக்கிறான், கற்பழிக்கிறான் என்று சொன்ன புலிகள் கையைத் தூக்கிக் கொண்டு சரணடைந்தது இவர்களுக்கு கிட்ணிகள் இல்லை என்பதாலா? இதுபோல முன்னர் எத்தனை பொய் சொல்லியிருப்பார்கள் என்பதற்கு இவைகளை நோக்கலாம். இவர்களை உதாரணத்துக்கும் எடுக்கக் கூடாது. கூத்தணிதான் மக்களை மந்தைகள் ஆக்கியதே தவிர மக்கள் கூத்தணியை மந்தைகள் ஆக்கவில்லை.