இரண்டு மாதகாலமாக சாவகச்சேரி டிறிபேக்கல்லூரியிலும் தனியார் கல்விநிலையத்திலும் இயங்கிவந்த சாவகச்சேரி மகளிர்கல்லூரி புதன்கிழமை முதல் சொந்தக் கட்டிடத்தில் இயங்கவுள்ளது. இப் பாடசாலையில் வன்னியில் இருந்துவந்த 354 குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டிருந்தமையால் இப்பாடசாலை தனியார் கட்டிடங்களில் இயங்கிவந்தன. சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டிருந்த அகதிகள் கொடிகாமம் இராமாவில் புனர்வாழ்வுக்கிராமத்துக்கு மாற்றப்பட்டமையால் பாடசாலை முழுமையான தொற்றுநீக்கிக்கு உட்படுத்தப்பட்டபின்னர் பாடசாலை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.