ஐன்ஸ்டின், காந்தி, ஷான் போல் சார்த்ர் போன்ற உலகின் முன்னோடி சிந்தனையாளர்களின் பொன்மொழிகளை லண்டன் சுரங்க ரயிலின் ஒரு மார்க்கத்தில், போக்குவரத்து நிலவரம் குறித்த அறிவிப்புகளுடன் அறிவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
லண்டன் சுரங்க ரயில் வலையமைப்பில், ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்துக்கு செல்லும் பாதையை உள்ளடக்கிய, பிக்கடில்லி மார்க்கத்தில் பணியாற்றும் ரயில் ஓட்டுநர்களுக்கு, பயணிகளுக்கு அறிவிப்புகளைத் தரும் போது, இந்த பொன்மொழிகளை எடுத்துக்கூற உதவ, பொன்மொழிப் புத்தகம் ஒன்று தரப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கு உந்துதலாக இருந்த பிரிட்டிஷ் கலைஞர், ஜெரிமி டெல்லர், இந்த முயற்சி பயணிகளுக்கு ஆறுதலாக இருக்கும் என்று நம்புவதாகக் கூறினார்.