ஊவா மாகாண சபை, யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள் ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க எதிர்வரும் 30 ம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே வழங்கியிருந்த திகதிக்கமைய நேற்றைய தினத்துடன் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்கும் காலம் நிறைவடைகின்றது. எனினும் எதிர்வரும் 30ம் திகதி வரை இதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளதுடன் அதற்குப் பின்னர் நேரடியாகவோ, தபால் மூலமோ தாமதமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், வவுனியா பகுதிகளில் தபால் மூல விண்ணப்பம் மற்றும் இடம்பெயர்ந்தோரின் விண்ணப்பமும் ஜூன் 30 ம் திகதி வரையே ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. அதற்குப் பின்னரான தாமதமாகும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுமெனவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.