பன்றிக் காய்ச்சல் என்றழைக்கப்படும் இன்புளுவன்சா (ஏ) எச்1 என்1 (Influenza (A) H1N1) வைரஸானது பன்றிகளிலிருந்து பரவுவதில்லையென்றும் அது மனிதர்களில் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோயென்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை அலுவலகம் தெரிவித்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே, பன்றிக் காய்ச்சல் என இந்த வைரஸை அடையாளம் காட்டுவதை விடுத்து நவல் இன்புளுவன்சா (ஏ) எச்1 என்1 (Novol Influenza (A) H1N1) என பெயர் குறிப்பிடுமாறு உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைப் பிரதிநிதியான டாக்டர் வசிர்தோஷி ரேஸ்டமி தெரிவித்திருப்பதாக சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, கடந்த 5 மாதங்களில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த 2,906 நோயாளர்களிடம் வைத்திய ஆராய்ச்சி மன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது அதில் 1,667 பேர் டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.