ஒப்பந்த அடிப்படையிலான மற்றும் தற்காலிக ரயில் ஊழி யர்கள் 500 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நாளை (27) வழங்கப்ப டவுள்ளன. இது தொடர்பான வைபவம் போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழஹப்பெருமவின் தலைமையில் நாரஹேன் பிட்ட சாலிகா மண்டபத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் அமைச்சர் லசந்த அழகியவன்ன, ரயில்வே பொதுமுகாமையாளர் பீ. பீ. விஜேசேகர உட்பட பலர் பங்கேற்கவுள்ளனர்.