பாகிஸ் தானிய தாலிபன் தலைவர் பைதுல்லா மெஹ்சுத்தின் எதிர்ப்பாளரான குவாரி சைனுதீன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவரது பாதுகாவலரால் அவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. பொதுமக்களை கொல்லும் தற்கொலை குண்டு தாக்கு தல்களை பயன்படுத்தும் பைதுல்லா மெஹ்சூத் இன் தாக்குதல் நடைமுறைகளை இவர் கண்டித்திருந்தார். இத்தகைய தாக்குதல்கள் இஸ்லாத்துக்கு புறம்பானவை என்று அவர் கூறியிருந்தார்.
தாலிபனுக்கு எதிரான தாக்குதல்களை பாகிஸ்தான் அரசாங்கம் தீவிரப்படுத்தியிருக்கும் பின்னணியில் இந்த கொலை நடந்திருக்கிறது.தாலிபன்கள் வலுவாக இருப்பதாக கருதப்படும் தெற்கு வசிரிஸ்தானில் ராணுவம் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தக்கூடும் என்கிற நிலையில், தீவிரவாதிகள் மத்தியில் நிலவக்கூடிய பிளவுகள் வெளியில் தெரியத்துவங்கியிருப்பதாக, செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்
palli.
அப்ப சரி தலிபானும் புலிபோல் ஒப்பாரி வைக்க வேண்டியதுதான்; ஆசை அதிகம் ஆனால் ஆயுததாரிகள் கூட அவஸ்த்தைபட வேண்டும் என்பதுக்கு சமீப காலமாக நடக்கும் சம்பவங்கள் ஒரு எடுத்து காட்டு.