சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவில் கலந்துகொள்ள ஐ.தே.க. ஜே.வி.பி. மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுக்கு; மீண்டும் அழைப்பு விடுக்கவுள்ளதாக விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சரும் சர்வகட்சிக் குழுவின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார். சர்வகட்சிக் குழுவின் யோசனைகள் எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என்று விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சரும் சர்வகட்சிக் குழுவின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார்.
ஐ.தே.க. சர்வகட்சிக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட சமயம்ää எழுத்து மூலம் பல கருத்துகளை முன்வைத்தது. அந்த கருத்துகள் குறித்து பல தடவைகள் ஆராயப்பட்டு அதில் தேவையானவை மட்டும் எடுத்துக்கொள்ளப்பட்டன. தற்பொழுது இவர்கள் பிரிந்து நிற்கின்றனர். சிறந்த ஒரு தீர்வை முன்வைப்பதற்கு அதிகாரத்தை பகிர்வதற்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும். ஒவ்வொரு கட்சிகளும் பின்வாங்குவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. நெநோ தொழில்நுட்ப வேலைத்திட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று பிற்பகல் நார ஹேன்பிட்டியிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடை பெற்றது.
இதன் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவி த்தார். அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்:-
சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை பெற்றுக்கொடுப்பதே எமது பிரதான நோக்கமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உரிய தீர்வு முன்வைக்கப்படும். அதிகாரம் பகிரப்படும். அவ்வாறு பகிரப்படாவிடின் தீவிரவாதமும் பிரிவினைவாதமும் திரும்பவும் உருவாகும். பிரபாகரனைப் போன்று பலர் உருவாகலாம்.
இதுவரை 120 அமர்வுகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அமர்வுகளும் பல மணித்தியாலங்கள் நடைபெற்றன. இதற்கு பிரதான காரணம்ää இங்கு நடைபெற்ற சகல கூட்டங்களின் போதும் சகலருக்கும் கருத்து வழங்க இடமளிக்கப்பட்டதேயாகும். கூட்டங்களின்போது பேசப்படும் சகல தகவல்களும் ஹன்சார்ட்கள் போன்று பதிவு செய்யப்பட்டு அடுத்த கூட்டத்திற்கு முன்னர் சமர்பிக்கப்பட்டு தேவையான மாற்றங்களும் வழங்கப்படும்.
வெளிநாடுகளின் தலையீடுகள் இருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர். அதில் எவ்வித உண்மையுமில்லை. தற்பொழுது எமக்கு ஒரு நாடு உள்ளது. அதனை பாதுகாக்க வேண்டும். அதேசமயம் உரிய தீர்வும் வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.