கொழும் புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான உள்ளுர் விமான சேவையில் இடம்பெற்ற எல்லைகள் குறைக்கப்பட்டுள்ளதாக உள்ளுர் விமான அதிகாரசபையின் பதில் பணிப்பாளர் பராக்கிரம திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதுவரையில் யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவை கடல் எல்லையின் மேலாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. எனினும் தற்போது நிலப்பரப்புக்கு மேலாக விமான சேவையை மேற்கொள்ள நேற்று முன்தினம் முதல் பாதுகாப்பு தரப்பின் அனுமதி கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு நிலப்பரப்புக்கு மேலாக விமான சேவையை மேற்கொள்ளும் போது அன்னளவாக 15 தொடக்கம் 20 கடல்மைல்கள் தூரம் குறைவடையலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.