இங்கி லாந்து நாட்டு இளவரசர் வில்லியம், ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு சென்று யுத்த களத்தில் இங்கிலாந்து வீரர்களுடன் இணைந்து போர் செய்ய விரும்புகிறார்.
நான் இராணுவ சேவையில் இருந்து விலகி அரசபொறுப்பை ஏற்பதற்கு முன்பு, போர்க்களத்தில் பணியாற்றுவேன் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார். இவர் சார்ள்ஸுக்கு பிறகு பட்டத்துக்கு வரக்கூடிய இடத்தில் இருப்பதால், போர் முனைக்கு செல்லத்தடை இருப்பதாக நம்பி வந்த அவர், தன் தம்பி ஹரி போர் முனைக்கு சென்று திரும்பிய பிறகு தானும் போர் முனைக்கு செல்வதற்கு தடை இருக்காது என்று நம்புகிறார்.
“என் கண்முன்னாலேயே என் தம்பி ஹாரி போர் முனையில் பணியாற்றி இருக்கும் போது, ஏன் நான் பணிபுரிய முடியாது” என்று கேட்டார். ஆப்கானிஸ்தான் சென்று போர்க் களத்தில் குதிக்க நான் விரும்புகிறேன்’ என்று அவர் மேலும் தெரிவித்தார். இளவரசர் வில்லியம் இப்போது விமானப் படையில் விமானியாக பயிற்சி பெற்று வருகிறார்.
DEMOCRACY
ஏன்!, நீர் “சர் பட்டம்(நைட்ஹூட்)” பெறுவதற்கு ஆப்கானிஸ்தான்தானா கிடைத்தது?. உம் மீது பரிதாபம் இருந்தாலும், “மிகப்புராதான புத்தர் சிலையை அநியாயமாக உடைத்த முட்டாள்களாக” “தாலிபான் மீது” கருத்து வேறுபாடு இருந்தாலும், உம் மனதில் மீண்டும் இதன் மூலம், காலனித்துவ மனப்பான்மை தலைத் தூக்கினால், அது வேரோடு நசுக்கப்பட வேண்டும்.
yoganathan
we know you, stay in the camp with all the facilities, the normal working class soldiers go to the front to fight – even if you go, 100 working class solders wiil be in the front of you – do not tell us that you going to fight in the afkanistan.